பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 159


தலைவி இனி இற்செறிக்கப்படுவாள் என்பதனையும் உணர்த்தினளாம். கோடு இணர் களுலிய வேங்கை மடமயிற் குடுமியின்' தோன்றும் என்றது, வேங்கை மலருங்காலம் என்பதனைக் குறித்ததாம். உம்பற் பெயர்ந்து சின்னாள் கழியாமையே. வழிவழிப் பெருகி அலராகின்றது. என்றது, தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்ததனைக் குறித்ததும் ஆகலாம். அன்றி, இடையிற் சிறிது காலம் வராதிருந்தமையும் ஆகலாம். கொங்கர் என்றது கொங்கு நாட்டினரான மக்களை உள்ளி விழவில் அரையிலே மணியினைக் கட்டியவராக ஆரவாரத்துடன் தெருக்களில் அவர் ஆடி மகிழ்வர் என்பதும் கூறப்பெற்றது. அம்பணை விளைந்த தேக்கட்டேறல். மகிழும் சீறூர் எனவே, அவர் வாய் அலரைக் கட்டுப்படுத்த முடியாமையும் கூறினள்.

369. காண்பாய் மகளே!

பாடியவர்: நக்கீரர் திணை: பாலை, துறை: மகட்போக்கிய செவிலி சொல்லியது. சிறப்பு: சோழரின் படைப் பெருக்கமும்: பேரூர்ச் செழுமையும்.

(தலைவியொருத்தி ஒருவனைக் கண்டு காதலித்து அவனுடன் களவிலே உறவாடியும் வந்தனள். அவளின் உறவினையறிந்த இல்லத்தினர் அவளை இல்லிலே செறித்துக் காவலும் இட்டனர். அவளுக்கு வேறொருவனை மணவாளனாக்கவும் திட்டமிட்டனர். அவள் உள்ளம் புயலாக மாறிற்று. ஒரு நாள், அவள் தன் உளங்கவர்ந்த காதலனுடனே கூடியவளாக, யாருமறியாமல், வெளியேறிச் சென்றுவிட்டாள். அவள்பால் அன்புடைய செவிலித்தாய், அவளுடைய அந்த உடன் போக்கினை நினைந்து இவ்வாறு புலம்புகின்றனள். இந்தத் துறையிலே அமைந்தது இச் செய்யுள்)

கண்டிசின் - மகளே! - கெழீஇ இயைவெனை
ஒண்தொடி செறித்த முன்கை ஊழ்கொள்பு
மங்கையர் பலபா ராட்டச் செந்தார்க்
கிள்ளையும் தீம்பால் உண்ணா மயிலியற்

சேயிழை மகளிர் ஆயமும் அயரா
5


தாழியும் மலர்பல அணியா கேழ்கொளக்
காழ்புணைந்து இயற்றிய வனப்பமை நோன்சுவர்ப்
பாவையும் பலிஎனப் பெறாஅ நோய்பொர
இவைகண்டு இணைவதன் தலையும் நினைவிலேன்

கொடியோள் முன்னியது உணரேன் 'தொடியோய்!
1O