பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 161


வளமுடைய தன் நல்ல வளமனையிற், புத்துடையும் புத்தணியும் ஆகிய பலவும் புனைந்து, தமராவர் மணம் செய்விக்கவும் அவள் மனம் விரும்பாளாயினள்.

கவர்த்த அடியினையுடைய ஒமை மரங்கள் உயரமாக வளர்ந்துள்ள காடாகிய நீண்ட இடத்திலே, மணிகள் பதித்த பரிசையினையும், சிறந்த தண்டினைப் பெற்ற நெடிய வேலினையும், துணிந்த உள்ளத்துடனே மிகுதியான உடல்வலியினையும் உடையவனும், அறியாத தேயத்து அரிய சுரநெறியிலே கொண்டு போகியவனுமான இளையோனுக்கு மனம் பொருந்தியவள் ஆயினளே, என்னுடைய பெரிதான மடப்பமும் தகுதியும் உடைய மகள்!

சீரும் சிறப்பும் இல்லாமல். சிற்றுாரிடத்தே, வறுமையுற்றிருக்கும் பெண்டிரது புல்வேயப் பெற்றுள்ள குடிலாகிய, ஒரு பசுவினையும் கட்டியிருக்கும் ஒற்றைத் துணியினையுடைய முன்றிலைக் கொண்ட, பொருத்தமற்ற வறிய மனையிடத்தே, தன் சிலம்பினைக் கழித்து, அவனுடன் மணம் பொருந்தினளோ என்று கருதி, யான் நோகின்றேனே!

சொற்பொருள்: 1. கெழீஇ இயைவெனை - ஒன்றுபட்டு அன்பு பொருந்தியிருந்த என்னை, 3. ஊழ் கொள்பு முறையாகக் கொண்டு. 3. செந்தார்க் கிள்ளை - சிவந்த ஆரத்தையுடைய கிளி; கிளிகளின் கழுத்தில் விளங்கும் சிவந்த இரேகைகளைக் குறிப்பது இது 5 அயரா - விளையாட்டு அயர மாட்டா. 6. தாழி - பூச் செடிகள் கொண்ட தாழி. கேழ் கொள்ள - நிறம் கொள்ள. 7. காழ் - புனைந்து - முத்தாரத்தால் ஒப்பனை செய்து காழ் புணர்ந்து எனவும் பாடம், 8. சுவர்ப் பாவை - சுவரிடத்தே எழுதியுள்ள பாவை, கந்திடத்தே நிலைபெற்ற பாவையினைக் கந்திற்பாவை என்றாற்போலச் சுவரிடத்தே கொண்ட பாவையினைச் 'சுவர்ப்பாவை’ என்றனர். 10. கொடியோள் - கொடிபோன்றவள். முன்னியது - எண்ணியது. 11. ஒலிகுரல் - தழைத்த கூந்தல். மண்ணல் - கழுவி ஒப்பனை செய்தல். 15. நிதியுடை - செல்வளம் உடைய, நகர் - பெருமனை. 16 கவர் முதல் ஒமை கவர்த்த -அடிமரத்தையுடைய ஒமை மரம். உலவை - காடு; வெம்மையுடைய காடு என்க; 21. சிறியோன் - இளையோன்; அவளுடைய காதலனைக் குறித்தது. 21. பெருமடத் தகுவி - பெரிதான மடப்பத்தையுடையவளும், தகுதியினை உடையவளுமான மகள்; தலைவியைக் குறித்தது. 22. சிறப்பு - நல்ல மதிப்பு. சீர் - உயர்வான தன்மை. 23. நல்கூர் பெண்டு-வறுமையில் வாட்டமுற்றிருக்கும்பெண் தலைவனின் தாயைக் குறித்தது.