பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 165



(பொருள் வேட்கையின் மிகுதியினாலே, தன்னுடைய அன்புறு காதலியைப் பிரிந்து, வினைமேற் கொண்டவனாகத் தலைவன் வேற்றுநாடு நோக்கிச் செல்லுகின்றவன், இடைச் சுரத்தே தன் காதலியின் நினைவு மிகுதியாக எழத், தன் நெஞ்சிற்குக் கூறியவனாக அமைந்த அரிய செய்யுள் இதுவாகும்)

அவ்விளிம்பு உரீஇய விசையமை நோன்சிலை
செவ்வாய்ப் பகழிச் செயிர்நோக்கு ஆடவர்
கணையிடக் கழிந்ததன் வீழ்துணை உள்ளிக்
குறுநெடுந் துணைய் மறிபுடை ஆடப்
புன்கண் கொண்ட திரிமருப்பு இரலை

மேய்பதம் மறுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து
நெய்தலம் படுவில் சில்நீர் உண்ணாது
எஃகு உறு மாந்தரின் இனைந்துகண் படுக்கும்
பைதற வெம்பிய பாழ்சேர் அத்தம்
எமியம் நீந்தும் எம்மினும் பணிவார்ந்து 10

என்ன ஆம்கொல் தாமே 'தெண்நீர்
ஆய்சுனை நிகர்மலர் போன்ம்' என நசைஇ
வீதேர் பறவை விழையும்
போதார் கூந்தல்நம் காதலி கண்னே?

நெஞ்சமே! அழகிய விளிம்பினை உருவி நாணேற்றிக் கொண்ட விசையமைந்த வலிய வில்லையும், அதனிடத்தே குருதியாற் சிவப்புற்ற முனையினையுடைய அம்பினையும் கொண்டவராகச், சினம் தங்கிய பார்வையினராக விளங்குபவர் மறவர்கள். தன் விருப்பமிக்க துணை, அவர்கள் கணையிடலான் இறந்ததனை நினைந்ததாகக், குறுமையும் நெடுமையுங் கொண்ட குட்டிகள் பக்கலில் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கத், துன்பத்தினைக் கொண்ட, முறுக்கமைந்த கொம்பினையுடைய ஆண்மானானது, மேயும் உணவினையும் வெறுத்துத் துயரத்துடனே, உளநோய் மிகுந்ததாகக், களர் நிலத்தேயுள்ள சிறு குழியிலே கண்ட சிறிதளவான நீரையும் உண்ணாது, அம்பு தைக்கப் பெற்ற மாந்தரைப்போல வருந்திச் சோர்ந்து கண்படுக்கும், பசுமையறக் கொதிப்புற்ற பாழ்பட்ட காட்டுவழியும் இதுவாகும்.

இதன்கண், தமியேமாகக் கடந்து செல்லுகின்ற எம்மைக் காட்டினும் -

'தெளிந்த நீரினையுடைய அழகிய சுனையிடத்து ஒளி பொருந்த விளங்கும் மலரைப்போலும்' என்னும்படியாகக் கருதித், தேனை உண்ணுதலை விரும்பிப் பூக்களை நாடித்திரியும்