பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 169


நேர்ந்தமைக்கு அவள் காரணமன்று’ என்று கூறுகின்ற அவனுடைய காதற்செவ்வியை அறிந்து இன்புறலாம்.

'நாடுகாண் நனந்தலை' என்றது,பாழி உயரிய மலையிடத்து. அகன்ற பக்கலிலே இருந்தமையின், அதனிடத்து நின்றார்க்கு நன்னனின் நாடு முழுமையும் காண்பதற்கு உரியதாக விளங்கும் என்றதாம். அன்றி, நாடனைத்தும் கண்டு போற்றுதற்கான சிறப்புடைய, அகற்சிவாய்ந்த இடமும் ஆம். பாழிப் பேரூர்க்கண்ணே தொன்முது வேளிர் ஒம்பிவைத்த பெருஞ் செல்வத்தைப் பற்றியும் அதற்கு அமைத்திருந்த காவலின் மிகுதியைப் பற்றியும் பிற செய்யுட்களும் கூறும். -

'வேண்முது மாக்கள் வியனகர்க் கரந்த அருங்கல வெருக்கையின் அரியோள்’ எனவே, அத்துணைச் செல்வக் குடியினள், முகுகுடியினள், காவல் உடைய பெருமனையினள் தலைவி என்பதும் உணரப்படுவதாம்.

அடிக்கடி அவளை நாடி வந்துவந்து காணாதே திரும்புகின்ற அவனுடைய தன்மைக்கு, ஊசலின் ஊர்ந்திழி கயிற்றின் தன்மையினையும், துடியின் வாரானது செறிந்தும் நெகிழ்ந்தும் இயங்கும் இயல்பினையும் கூறிய சிறப்பினை அறிந்து இன்புறுக

‘மேய்மணி யிழந்த பாம்பின் நிலை'யும் தலைவியை அடையப் பெறாது உயிர்சோரத் துடிக்கும் தலைவனின் நிலையும் ஒப்பிட்டுக் காண்க. அவளைக் காணாத அவனுடைய ஏக்கமிகுதி, சீவமணியினை இழந்தபின் உயிர்சோரத் துடிக்கும் பாம்பின் வருத்த மிகுதிக்கு ஒப்பாயிருந்தது என்க.

'கடுமுனை’ என்றது, போரின் முன்னணியினை, முன்னணியிற் சிறந்தவீரரே நிற்பராதலின், அதனை ஊடறுத்துச் செல்வது பெரிதும்முயற்சியுடைய செயலாயிருக்கும். 'அதனை அலைத்த கொடுவில் ஆடவர்' எனவே, அவருடைய ஆண்மைச் சிறப்பும் புலனாகும். -

373. துயிலும் துறந்தாளோ!

பாடியவர்: பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார். திணை: பாலை, துறை: பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு: ஓரெயில் மன்னனின் நிலைமை.

(தலைவியைப் பிரிந்தவனாகப், பொருளிட்டி வருதல் குறித்த எண்ணம் மேலெழக், காட்டு வழியூடு வேற்றுநாடு நோக்கிச்