பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

அகநானூறு - நித்திலக் கோவை


சென்று கொண்டிருக்கின்றான். ஒரு தலைமகன், இடைச் சுரத்தில், அவனுடைய காதல் நெஞ்சத்தில், தலைவியின் நினைவு மிகுதியாகின்றது. அப்போது, இங்ஙனம் கூறி, அவன் தன் செயலுக்கு வருந்துகின்றனன்.)

முனைகவர்ந்து கொண்டெனக் கலங்கிப் பீர்எழுந்து
மனைபாழ் பட்ட மரைசேர் மன்றத்துப்
பணைத்தாள் யானை பரூஉப்புறம் உரிஞ்சச்
செதுகாழ் சாய்ந்த முதுகாற் பொதியில்
அருஞ்சுரம் நீந்திய வருத்தமொடு கையற்றுப் 5
பெரும்புன் மாலை புலம்புவந்து உறுதர
மீளிஉள்ளம் செலவுவலி யுறுப்பத்
தாள்கை பூட்டிய தனிநிலை இருக்கையொடு
தன்னிலை உள்ளும் நந்நிலை உணராள்
இரும்பல் கூந்தல் சேயிழை மடந்தை 1O

கனையிருள் நடுநாள் அணையொடு பொருந்தி
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு ஐதுஉயிரா
ஆயிதழ் மழைக்கண் மல்கநோய் கூர்ந்து
பெருந்தோள் நனைக்கும் கலுழ்ந்துவார் அரிப்பனி
மெல்விரல் உகிரின் தெறியினள் வென்வேல் 15

அண்ணல் யானை அடுபோர் வேந்தர்
ஒருங்குஅகப் படுத்த முரவுவாய் ஞாயில்
ஓர்எயில் மன்னன் போலத்
துயில்துறந் தனள்கொல்? அளியள் தானே!

நெஞ்சமே!

போர்முனை கவர்ந்ததாகக் கலக்கமுற்றுப், பீர்க்குப் படர்ந்து, வீடுகளும் பாழ்பட்டுப் போய், மரைமாக்கள் வந்து அடைந்திருக்கின்ற மன்றம் இது. பருத்த தாளினையுடைய யானையானது, தன் பெருத்த முதுகினை உராய்தலினாலே, செதுக்கியமைத்த விட்டமும் சாய்ந்துபோயிருக்கும், முதிய தூண்களையுடைய தாயிருப்பது, இந்தமன்றத்தின் அம்பலம். அதனிடத்தே

அரிய சுரநெறியினை கடந்து வந்த வருத்தத்தினாலே செயலிழந்தவராக, பெரிய புற்கென்ற மாலைக்காலத்திலே, தனிமைத் துயரமும் வந்து அடையத், திண்மையான உள்ளமானது மேற்கொண்டு செல்லுதலை வற்புறுத்தவும் அதற்கு இசையாது, முழந்தாட்களைக் கைகளாற் பூட்டிய தனித்த நிலையிலே இருப்பவர் நாம். தன்னுடைய