பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

அகநானூறு - நித்திலக் கோவை



374. விருந்து எதிர் கொள்ள!

பாடியவர் : இடைக்காடனார். திணை: முல்லை. துறை: பாசறை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

(வேந்துவினை மேற்கொண்டோனாகித், தன்னுடைய அன்புறு காதலியைப் பிரிந்து, வேற்று நாட்டிலே பாசறைக் கண் தங்கியிருக்கின்றான் தலைவன். அவன் சென்ற முயற்சியிலே வெற்றிபெற்றதும், தன் மனைவியை நினைத்துக் கொண்டவன், தன் வீட்டிற்குச் செல்லும் விருப்பம் மேலேழ இவ்வாறு கூறுகின்றனன். இந்த முறையிலே அமைந்தது இச் செய்யுள்)

மாக்கடல் முகந்து மாதிரத்து இருளி
மலர்தலை உலகம் புதைய வலன்ஏர்பு
பழங்கண் கொண்ட கெழும்பல் கொண்மு
போழ்ந்த போலப் பலவுடன் மின்னி
தாழ்ந்த போல நனியணி வந்து 5

சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி
இடியும் முழக்கும் இன்றிப் பாணர்
வடியுறு நல்யாழ் நரம்புஇசைத் தன்ன
இன்குரல் அழிதுளி தலைஇ நன்பல
பெயல்பெய்து கழிந்த பூநாறு வைகறைச் 1O

செறி.மணல் நிவந்த களர்தோன்று இயவில் குறுமோட்டு மூதாய் குறுகுறு ஓடி
மணிமண்டு பவளம் போலக் காயா
அணிமிகு செம்மல் ஒளிப்பன மறையக்
கார்கவின் கொண்ட காமர் காலைச் 15

செல்க தேரே - நல்வலம் பெறுந!
பெருந்தோள் நுணுகிய நுசுப்பின்
திருந்திழை அரிவை விருந்தெதிர் கொளவே!

தேரினைச் செலுத்துதலிலே நல்ல திறன் வாய்ந்த பாகனே!

பெருங்கடலிலே முகந்துகொண்டு, திசைகள் எங்கணும் இருண்டு, அகன்ற இடத்தையுடைய உலகம் மறையும்படியாக வலமாக எழுந்து, பொறையால் வருத்தத்தைக் கொண்டன வளவிய பலவானமேகங்கள்.வானைப்பிளந்தனபோலப் பலவும் ஒருங்கே தோன்ற மின்னலையும் அவை செய்தன. தாழ்ந்து விடுவனபோல ஒன்றுடன் ஒன்று மிக நெருக்க முற்றவையாகவும் வந்தன. சோர்வுற்றனபோலச் சொரிவனவும் ஆயின. இடித்தலும் குமுறலும் இல்லாமற் போய்ப், பாணரின் வடித்தலுற்ற நல்ல யாழின் நரம்பினை இசைத்தாற்போன்ற ஒலியுடனே,