பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

அகநானூறு - நித்திலக் கோவை


பெறுந' என்பதனை எடுத்துக் காட்டிக், 'கரணத்தின் அமைந்து' என்னுஞ் சூத்திரத்தின், 'பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்’ என்னும் பகுதிக்கண் உரைப்பர் நச்சினார்க்கினியர்.

375. கண்கள் ஆழல!

பாடியவர்: இடையன் சேத்தங்கொற்றனார். இடையன் செங்கொற்றனார் எனவும் பாடம். திணை: பாலை. துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. சிறப்பு: இளம்பெருஞ் சென்னியின் வீரம்.

(தலைமகனின் பிரிவுக் காலத்திலே, அந்தப் பெருந்துயரி னாலே, உடல் நலமும் உள்ளத்து நினைவும் வேறுபட்டவ ளாயினாள் தலைமகள். அப்பொழுது அவளின் துயரத்தைக் கண்ட தோழி, அவளுக்கு ஆறுதல் உரைக்க முற்படுகின்றனள். தோழியின் ஆறுதல் மொழிகளைக் கேட்கும் தலைவி, தன் நிலையினைக் கூறுவதாக அமைந்தது இச் செய்யுள்)

'சென்று நீடுநர் அல்லர்; அவர்வயின்
இணைதல் ஆனாய்’ என்றிசின் இகுளை!
அம்புதொடை அமைதி காண்மார் வம்பலர்
கலனிலர் ஆயினும் கொன்றுபுள் ஊட்டும்
கல்லா இளையர் கலித்த கவலைக் 5

கணநரி இனனொடு குழிஇ நினனருந்தும்
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசிவிரல்
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
அரைசேர் யாத்த வெண்திரள் வினைவிறல்
எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன் 10

விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி
குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார்
செம்புஉறழ் புரிசைப் பாழி நூறி
வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும்

அஞ்சுவரு மரபின் வெஞ்சுரம் இறந்தோர்
நோயிலர் பெயர்தல் அறியின்
ஆழல மன்னோ தோழி!என் கண்ணே.

தோழி! 'நம்மைப் பிரிந்து சென்று, காலத்தை நீட்டிப்பவர்.நம் தலைவர் அல்லர். அதனால், அவர் திறத்து வருந்துதலை நீ ஆற்றியிருப்பாயாக’ என்கின்றனை.