பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

அகநானூறு - நித்திலக் கோவை



விளக்கம்: 'அம்பு தொடை அமைதி காண்மார் வம்பலர் கலனிலர் ஆயினும் கொன்று புள்ளுட்டும் கல்லா இளையர் கலித்த கவலை என்பதும், ‘கண நரி இனனொடு குழிஇ நிணன் அருந்தும் என்றதும், 'நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசிவிரல் அத்த எருவைச் சேவல் என்றதும், காட்டு வழியிலே உளவான ஏதங்களைக் குறித்தன. அவ்வழிச் செல்பவர் தலைவராதலின், அவர் ஏதமின்றிச் செல்ல வேண்டுமே என்ற கவலையினால், தான் கண் கலங்கியதாகத் தலைவி கூறினாள் என்க.

'வினைவிறல் எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன்' என்பது, 'விளைவிறல் எழுஉத் திணிதோள் சோழர் பெருமகன்' எனப் பாடபேதத்துடனும் விளங்கும். இந்தப் பாடத்திற்கு, ‘வெற்றி விளைக்கும் கணையமரம் போன்ற திண்மையான தோள்களையுடைய சோழர் பெருமான்’ என்று பொருள் கொள்க.

376. நலம் தந்து செல்வாய்!

பாடியவர்: பரணர். திணை: மருதம் துறை: காதற் பரத்தை புலந்து சொல்லியது. சிறப்பு: அத்தியைக் காவிரி கொண்டு சென்ற செய்தியும்; குட்டுவனின் மாந்தை நகரத்து எழிலும்; கரிகாலனைப் பற்றிய குறிப்பும்.

(ஒரு தலைவன் தன்னுடைய காதற் பரத்தையோடு இன்புற்றுச் சிலகாலம் இருந்த பின்னர், அவளைப்பிரிந்து, சேரிப்பரத்தை ஒருத்திபாற் செல்வதற்கு நினைக்கின்றான். அப்பொழுது, அவள் வருத்தமுற்று அவன்பாற் கூறுகின்ற பாங்கிலே அமைந்தது இச்செய்யுள்)

          செல்லல் மகிழ்ந! நிற் செய்கடன் உடையென்மன்
          கல்லா யானை கடிபுனல் கற்றென
          மலிபுனல் பொருத மருதோங்கு படப்பை
          ஒலிகதிர்க் கழனிக் கழாஅர் முன்துறைக்
          கலிகொள் சுற்றமொடு கரிகால் காணத் 5

          தண்பதம்கொண்டு தவிர்த்த இன்னிசை
          ஒண்பொறிப் புனைகழல் சேவடி புரளக்
          கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று
          இரும்பொலப் பாண்டில் மணியொடு தெளிப்பப்
          புனல்நயந்து ஆடும் அத்தி அணிநயந்து 10

          காவிரி கொண்டுஒளித் தாங்கு மன்னோ!
          நும்வயிற் புலத்தல் செல்லேம்; எம்வயின்
          பசந்தன்று காண்டிசின் நுதலே; அசும்பின்