பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 7


தலைமகளை விரைந்து வேட்டுவந்து, மணந்து, உடன்கொண்டு சென்று இல்லறம் நடத்தலை விரும்புகின்றாள் என்பதனைத் தலைவன் உணர்பவனாகிறான் என்பது தெளிவாகும்.

303. சேர்வேன் அவரிடம்!

பாடியவர் : ஒளவையார். திணை : பாலை, துறை : தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதுர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு : பசும்பூண் பொறையனின் கொல்லிமலையிலே வீழ்கின்ற அருவி, பாரியின் பறம்பிலே கதிர் கொணர்ந்து பசிதீர்த்த குருவியினத்துப் பெருஞ் செயல்.

(தலைவியைப் பிரிந்து தலைமகன் வேற்றுார் சென்றிருந்த காலம். வருவதாக அவன் குறித்துச் சொல்லிச் சென்ற தவணை நாளும் கடந்துவிட்டது. அவளுடைய ஏக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து பெருகுகிறது. உடல் மெலிவும் அதிகமாகின்றது. அந்த நிலையிலே, தானும் அவன் சென்ற வழியூடே சென்று அவனை அடையப் போவதாகத் தன் நெஞ்சிற்குச் சொல்லி அவலம் கொண்டு புலம்புவதாக அமைந்த செய்யுள்)

இடைபிறர் அறிதல் அஞ்சி மறைகாந்து
பேஎய் கண்ட கனவிற் பன்மாண்
நுண்ணிதின் இயைந்த காமம் வென்வேல்
மறமிகு தானைப் பசும்பூண் பொறையன்

கார்புகன் றெடுத்த சூர்புகல் நனந்தலை
5


மாஇருங் கொல்லி யுச்சித் தாஅய்த்
ததைந்துசெல் அருவியின் அலாளழப் பிரிந்தோர்
புலங்கந் தாக இரவலர் செலினே
வரைபுரை களிற்றொடு நன்கலன் ஈயும்

உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பின்
1O


நிரையறைக் குரீஇயினம் காலைப் போகி
முடங்குபுறச் செந்நெல் தரீஇயர் ஒராங்கு
இரைதேர் கொட்பின வாகிப் பொழுதுபடப்
படர்கொள் மாலைப் படர்தந் தாங்கு

வருவாஎன்று உணர்ந்த மடங்கெழு நெஞ்சம்!
15


ஐயந் தெளியரோ நீயே பலவுடன்
வறன்மரம் பொருந்திய சிள்வீ டுமணர்
கணநிரை மணியின் ஆர்க்கும் சுரனிறந்து
அழிநீர் மீன்பெயர்ந் தாங்கவர்

வழிநடைச் சேறல் வலித்திசின் யானே.
20

2