பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

அகநானூறு -நித்திலக் கோவை




ஆள்வினைக்கு எதிரிய மீளி நெஞ்சே!
நினையினை ஆயின் எனவ கேண்மதி!- 5

விரிதிரை முந்நீர் மண்திணி கிடக்கைப்
பரிதிஅம் செல்வம் பொதுமை இன்றி
நனவின் இயன்றது ஆயினும் கங்குற்
கனவின் அற்று அதன் கழிவே அதனால்
விரவுறு பன்மலர் வண்டுசூழ்பு அடைச்சிச் 10

சுவல்மிசை அரைஇய நிலைதயங்கு உறுமுடி
ஈண்டுபல் நாற்றம் வேண்டுவயின் உவப்பச்
செய்வுறு விளங்கிழைப் பொலிந்த தோள்சேர்பு
எய்திய கனைதுயில் ஏற்றொறும் திருகி
மெய்புகு வன்ன கைவர் முயக்கின் 15

மிகுதிகண் டன்றோ இலெனே நீ நின்
பல்பொருள் வேட்கையின் சொல்வரை நீவிச்
செலவுவலி யுறுத்தனை ஆயிற் காலொடு
கனைஎரி நிகழ்ந்த இலையில் அம் காட்டு
உழைப்புறத்து அன்ன புள்ளி நீழல் 2O

அசைஇய பொழுதில் பசைஇய வந்துஇவள்
மறப்புஅரும் பல்குணம் நிறத்துவந்து உறுதர
ஒருதிறம் நினைத்தல் செல்லாய் திரிபுநின்று
உறுபுலி உழந்த வடுமருப்பு ஒருத்தற்குப்
பிடியிடு பூசலின் அடிபடக் குழிந்த 25

நிரம்பா நீளிடைத் தூங்கி
இரங்குவை அல்லையோ உரங்கெட மெலிந்தே?

நம்மை விரும்பி வாழ்பவள் தலைவி, அவளுடைய பழைய அழகு கெடுமாறு, அறிவு தெளியப்பெறாததன் காரணமாகத், தீமையுடன் பொருந்தினாய். அருள் அற்று, நிமிர்ந்த வன்மையுடனே பொருளையும் விரும்பினாய். அதனைத் தேடும் முயற்சியினும் முற்பட்டாய், வலிய நெஞ்சமே! சற்றுச் சிந்திப்பாய் ஆயின், யான் கூறும் இவற்றையும் கேட்பாயாக

விரிந்த அலைகளையுடைய கடலினால் சூழப்பட்டிருப்பது மண்செறிந்த இவ்வுலகம். இதன்கண், முற்றவும் பொதுமை என்பதின்றி ஆட்சிச் சக்கரத்தைச் செலுத்தும் சிறந்த செல்வமானது, நனவின் கண்ணேயே வாய்த்தது என்றாலும். அது மறைதல், இரவிற் கனவிற்காண்பன மறைவது போன்ற அத்தன்மையதேயாகும்.