பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 185



அதனால், விரவுதல் பொருந்திய பலவகை மலர்களை வண்டினம் மொய்க்கும்படியாகச் சூடிப், பிடரின்மேல் அசைந்து கொண்டிருக்க விளங்கும் நிலையானது தயங்கும் பெரிய கொண்டையின், செறிந்த பலவாகிய நறுமணத்தினை வேண்டுமிடத்துப் பெற்று மகிழும்படியாகச் செய்யப்பெற்ற, விளங்கும் அணிகளால் அழகுற்ற, நம் தலைவியின் தோள்களை அணைந்து, பொருந்திய மிக்க துயிலினை அடையுந்தோறும், திருகி உடலோடு உடல்புகுவது போன்ற கைகளால் கவர்ந்து தழுவிக்கிடக்கின்ற அந்த இன்பத்தினும், மேலான ஒரு பொருளினை யான் கண்டறியேனே.

நீ, நின்னுடைய, பலவகையான பொருள்கள்பாற் கொள்ளும் விருப்பினாலே, என் சொல்லின் எல்லையைக் கடந்து செல்லுதலையும் வலியுறுத்தினை என்றால்

காற்றினாலே மிக்கெழுந்த தீ பரவியதனால் இலையற்றுப் போயின காட்டிலே, மானடலில் காணப்பெறும் புள்ளிகளைப்போலப் புள்ளிபட்டுத் தோன்றும் மரநிழலில் தங்கியிருக்கும் காலத்திலே, இவளது மறத்ததற்கரிய பல்வகைத் தன்மைகளும் நின் நெஞ்சத்தே வந்து பொருந்த, இவளை விரும்பி, ஒரு தன்மைத்தாக நினைத்தலையும் மாட்டாயாய். வேறுபட்டு நின்று. நின் திட்பம் கெட மெலிவுற்று, பெரிய புலியுடனே போரிட்டு வடுப்பட்டு வருந்திய கொம்பினையுடைய களிற்றின் பொருட்டாக, அதன் பிடியானையானது ஆரவாரித்து அடியிட்டுச் செல்லக் குழிந்த இடங்களையுடைய, செல்லத் தொலையாத நெடிய சுரத்தின் இடையே மயங்கி வருத்தமுறுவாயும் அல்லையோ? (அல்லையானால், இவளைப் பிரிந்து செல்லலை நயப்பாய் என்பது கருத்து)

சொற்பொருள்: 1. உறைவி-வாழ்பவளாய தலைவி. 2. தெருளுதல்-அறிவு தெளிதல். 3 நிமிர்ந்த முன்பு-மிக்கெழுந்த வன்மை, 4. ஆள்வினை-செயன் முயற்சி. மீளி நெஞ்சு-வலிய நெஞ்சு6. மண் திணி கிடக்கைமண் செறிந்த உலகம், 6.பரிதி அம் செல்வம்-ஆட்சி சக்கரத்தை நடத்தலாகிய செல்வப்பேறு. 9.கழிவு-மறைவு. 11:சுவல்-பிடரி முடிகொண்டை முடித்தலைப் பெற்றிருப்பது முடியாயிற்று. 14:கனைதுயில் மிக்க துயில், திருகி. பின்னிப் பிணைந்து17. சொல்வரை நீவி-சொல்லின் எல்லையைக் கடந்து 20. உழை-பெண்மான் 21,அசை இய-தங்கிய25. பூசல். ஆரவாரம்26.தூங்கி-மெலிவுற்றுத் தங்கி, -

விளக்கம்: 'வாழ்க்கை நிலையாமையினை உடையது' என்பதனை, விரிதிரை முந்நீர் மண்திணி கிடக்கைப் பரிதியம்