பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன்★ 189


 ஊனின் மிகுதியை அறிவித்துப் பறந்து எழுந்து செக்கர் வானம் போன்று வானத்தை அழகுசெய்திருக்கும். அத்தகைய அரிய சுரத்தினைக் கடந்துவந்த நம்மைக் காட்டினும்,

பகைவரது போர்முனைக்கண், அரணை வெற்றிகொண்ட, போர்த் தொழிலிலே வல்ல தானையினையும், வண்டுகள் மொய்க்கும் நறிய மலர்மாலையினையும் உடையவன் சேரன். அவன், போரிட்டு அழித்த, அவனுக்கு மாறுபட்ட பகைவரது பெரிதான கோட்டை மதிலைப்போலப் பெரிதும் பாழ்பட்டுப் போயின உடலினளாகி,

வண்டு உண்ண, ஆழ்ந்த நீரிடத்தே தோன்றிய நிரையான இதழ்களையுடைய குவளையினது, எதிர்வைத்த இருமலர் களைப்போல விளங்கிய தன் செவ்வரிபடர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் தெளிந்த நீரைத் தம்மிடத்தே கொள்ள நெடு மூச்செறிந்து வருந்தியிருப்பாளே! அவள் இரங்கத் தக்கவளே!

சொற்பொருள்: 1. ஆ.வி - யாளி என்று கூறப்படும் விலங்கு சிங்கத்து உருவோடு, யானைபோலத் துதிக்கையும் கொண்டதாக விளங்கியது. 2. நெடுந்தகை - தலைவன். குருகு குருத்து, 4. மஞ்சுதப மேகம் பெய்யாது நீங்க. 6 சூன்று - அகழ்ந்து 7. கற்றுரிக்குடம்பை - கன்றின் தோலாலான கூடு. 8. விற்சினம் தணிந்த-வில்லின் சினம் தணிவுற்ற; அதாவது வழிப்போக்கரைக் கொன்றுவிட்ட 11. பச்சூன் - பசிய ஊன். கொள்ளை - மிகுதி. பறைநிவந்து - எழுந்து பறந்து 15. உடற்றிய போரிட்டு அழித்த 21. கண்பனி கொள்ளல் - அழுது கண் கலங்கியிருத்தல்.

விளக்கம்: கடத்தற்கரிய நெடிய சுரத்தினை வருத்தத்துடன் கடந்துவரும் தன்னினும், தலைவி தன் பிரிவினால் வருந்தும் வருத்தம் மிகுதியானதோ என எண்ணுபவன், மீளவும் அங்ஙனம் பிரிந்து போகான் என்க.

‘எருவைச் சேவலின் ஈண்டுகிளைத் தொழுதி பச்சூன் கொள்ளை சாற்றிப் பறை நிவந்து செக்கர் வானின் விசும் பணி கொள்ளும் என்றது, அப்படி அவை பறத்தலால் பலரும் பச்சூன் மிகுதி உள்ளமையினை அறிபவராவர், அதனால் அஞ்சுவர் என்பதனாலாம்.

தலைவியின் உடலழகு கெட்ட நிலைக்கு, வீழ்ச்சியுற்ற கோட்டை மதிலைப்போல’ என்று உரைக்கின்ற உவமை நயத்தினையும் அறிந்து இன்புறுக.