பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

அகநானூறு -நித்திலக் கோவை





உள்ளாது கழிந்த முள்ளெயிற்றுத் துவர்வாய்ச்
சிறுவன் கண்ணி சிலம்பு கழிஇ
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே!

தன்னையொத்த ஆயமகளிரும், மயிலின் சாயலையுடைய என்னையொத்த தாய்மாரும் கண்டு மகிழும்படியாக-

கைவன்மையினை உடைய போர்யானைகளையும், கடிதாகச் செல்லும் தேரினையும் உடையவர் சோழர்கள். காவிரிக் கரையிலே அமைந்த உறையூர் அவர்கட்கு உரியது. அதனையொத்த செல்வமிக்க பெருமையிலே மேலோர் அவட்குவதுவை நிகழ்த்துவர். நல்ல மாண்பு கொண்டதாக விளங்கும் அந்த மணவிழாவிலே மயிர்ச் சாந்தினை அவட்குப் பூசி மற்றும் பொருத்தமான அணிபலவும் புனைந்து மணஞ் செய்து கொடுக்க, அவள் தன் கணவனுடன் சென்றாளும் அல்லள்.

மூங்கிலுடனே நெல்லி மரங்களும் உயரமாக வளர்ந்துள்ள கற்பாறைகளையுடைய பக்க மலையிலே, வழியிடையிலேயுள்ள ஆலமரத்தின் வாடியசைகின்ற நெடிய விழுதானது, தேமல் பொருந்திய தன் தொடையிலே நன்கு உராய்ந்து வருத்தவும், ஆடும் மயிலின் தோகையினைப் போலக் கூந்தலானது பொங்கிப் பரக்கவும், தான் விருப்புற்ற துணைவன் தன்னுடைய வளை பொருந்திய முன் கையினைப் பற்றியும், பல பிரிவினவாய பெரிய மாலையாகிய அழகிய வடங்களைக் கொண்ட மேகலையினை அணிந்த அகற்சியமைந்த அல்குலைப்பற்றி அணைத்தும் பெரிதும் ஊக்கப்படுத்த, ஊசலாடிக் களித்தனன். அதனால் ஊக்கங்கொண்டு, தன் வழி நடை வருத்தத்தையும் நினையாது சென்றனள் அவள். முட்போன்ற கூரிய பற்களையும், பவளம் போன்ற சிவந்த வாயிதழ்களையும் உடைய இளையளான அந்த வன்கண்மை உடையவள், தன் சிலம்புகளைக் கழித்து அறியப்படாத தேயத்தே, அவனுக்கு மனையாளாக ஆகுதல், மிகவும் கொடுமையுடையதாகும்.

சொற்பொருள்: 1. ஆயம் - ஆய மகளிர் 3 கைவல் யானை = கைவன்மையுடைய போர்யானை; கைவன்மை - ஆற்றல். 4. காவிரிப் படப்பை உறந்தை - பூங்காக்கள் பரந்ததோட்டக் கால்களையுடைய உறையூர்; காவிரிக் கரையதான உறையூரும் ஆம். 4. பொன் - செல்வமும் அழகும். புரையோர் - மேலோர். அயர்தல் மணவிழாக் கொண்டாடுதல்.6.தகரம் மயிர்ச் சாந்து. 7 காம்பு - மூங்கில், 8. கல்அறை - கற்பாறை, 9. வீழ் - விழுது. 10. தித்தி - தேமல், 11. அளைஇ பற்றி. 14. பொங்க - பொங்கிப் பரக்க. 15. ஊங்கி ஊக்கமுற்று.17. சிறுவன் கண்ணி-வன்கண்மை உடையவளாகிய இளையோள்; சிறுமை. இளமையைக் குறித்தது.