பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

அகநானூறு - நித்திலக் கோவை


உடலுள் ஊடுருவிச் செல்லும்படியாகச் செலுத்திய செந்நிறம் பூசினாற் போன்ற ஊன்புரளுகின்ற அம்பினோடு, காட்டு விலங்குகளின் அடிச்சுவடுகளை ஆராய்ந்து தொடர்பவனாக, வேட்டைக்கும் செல்வானோ? என்று.நாம் அவனை வினவினால் என்னவோ?”

சொற்பொருள்: 2. அமை - மூங்கில். தட்டை தட்டி ஒலியெழுப்பும் வகையிலே மூங்கிலை அறுத்துச் செய்த ஒரு கருவி. 3. நறுவிரை ஆரம் - நறுமணம் வாய்ந்த சந்தனமரம், அறவெறிந்து - முற்றவும் வெட்டி எறிந்து 4. உளைக்குரல் - துய்யினையுடைய தினைக்கதிர், 'விளைகுரல்' எனவும் பாடம். கிளை - மூங்கில் கவடு கிளைகள் கவறுபட்டுச் செல்லுகின்ற பகுதி. 11 நொவ்வு இயற் பகழி - விரையச் செல்லுதலையுடைய அம்பு.12. ஒருத்தல் - களிற்றுத் தலைவன்.14 செயிர்த்தல் -கறுவிக் கொள்ளல். 18. வெறி - முருகனை வேட்டு வெறியாடல், 23. மையல் வேழம் - மதயானை. 24. ஊட்டி யன்ன - ஊட்டினாற் போன்ற, 25 மான் - விலங்கு அடிவழி ஒற்றி தடத்து வழியே ஆராய்ந்து தொடர்ந்து 26 வேட்டம் வேட்டை

விளக்கம்: 'அன்னை ஏற்பாடுசெய்த வெறியாடலுள், வேலன், 'இது தெய்வக்குற்றம் என்றனனாயின்' என்றமையால் தலைவி இற்செறிக்கப்படுவாள் என்பதும், தலைவன் விரைவிலே வரைந்து கோடலில் மனஞ் செலுத்த வேண்டுமென்பதும் பெற்றனம்.

389. பகலும் நீங்கார்!

பாடியவர்: நக்கீரனார். திணை: பாலை துறை: பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.சிறப்பு: வானவரம்பனின் நாடு.

(தலைமகன், தன்னை வந்து இரந்தோர்க்கு வழங்குவதற்குப் பொருள் வேண்டுமெனக் கருதினான். தலைவியைப் பிரிந்து வெளிநாட்டிற்கும் போயினான். அதனால், தலைவியின் வாட்டம் பெரிதாயிற்று. அவளை ஆற்றுவதற்குத் தோழி ஒரு சமயம் முயல, அப்போது, தலைவி தன் நிலையினைத் தோழிக்கு விளக்கிக் கூறிய முறையிலே அமைந்தது இச்செய்யுள்)

அறியாய் - வாழி - தோழி! நெறிகுரல்
சாந்தார் கூந்தல் உளரிப் போதணிந்து
தேங்கமழ் திருதுதல் திலகம் தைஇயும்
பல்லிதழ் எதிர்மலர் கிள்ளி வேறுபட
நல்லிள வனமுலை அல்லியொடு அப்பியும் 5