பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 207



‘வானவரம்பன் சேரன்; புகழால் வானத்தையே தனக்கு எல்லையாக உடையவன் என்பது பொருள்.

தன்னைப்பிரிந்த துயரத்துடன், தலைவன் கடக்கவிருக்கும் காட்டுவழியின் கொடுந்தன்மையும் தலைவியின் உள்ளத்தே கவலையைத் தந்ததென்பது, களிற்றைக் கொன்ற புலி செருக்கித் திரியும் காடு என்றதனாற் புலனாகும்.

390. நெஞ்சம் ஒழிந்தது!

பாடியவர்: அம்மூவனார். திணை: நெய்தல். துறை: தலைமகன் பாங்கற்குச் சொல்லியது; நெஞ்சிற்குச் சொல்லிய தூஉமாம்.

(தலைவன் ஒருவன், தான் கண்டு காதலித்த ஒருத்திபால் உள்ளத்தைப் போகவிட்டு. அதனால் வாடி நலிவுற்று ஏங்கியவனும் ஆயினான். அப்போது அவனுடைய பாங்கன் அது குறித்துத் தலைவனை வினவ, அவன், தன் காதலிபற்றிய சந்திப்பின் தன்மையைக் கூறுகின்றனன். இம் முறையிலே அமைந்த செய்யுள் இது)

உவர்விளை உப்பின் கொள்ளை சாற்றி
அதர்படு பூழிய சேட்புலம் படரும்
ததர்கோல் உமணர் பதிபோகு நெடுநெறிக்
கணநிரை வாழ்க்கைதான் நன்று கொல்லோ
வணர்சுரி முச்சி முழுதுமற் புரள 5

ஐதகல் அல்குல் கவின்பெறப் புனைந்த
பல்குலைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி
நெல்லும் உப்பும் நேரே ஊரீர்!
கொள்ளிரோ எனச் சேரிதோறும் நுவலும்
அவ்வாங்கு உந்தி அமைத்தோ ளாய்!நின் 1O

மெய்வாழ் உப்பின் விலைஎய் யாம்எனச்
சிறிய விலங்கின மாகப் பெரியதன்
அரிவேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி
யாரீ ரோஎம் விலங்கி யீஇரென
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற 15

சில்நிரை வால்வளைப் பொலிந்த
பல்மாண் பேதைக்கு ஒழிந்ததென் நெஞ்சே!

பாங்கனே! உவர்நிலத்தே விளைந்த உப்பினை விலை கூறியவராக, வழிகளிலேபடுகின்ற புழுதியினையுடைய நெடுந் தொலைவுள்ள இடங்கட்குஞ் செல்லும், செறிந்த கோல்களைக் கொண்ட உமணர்கள் போகும் நெடிய நெறிகளிலே அந்தக்