பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10

அகநானூறு -நித்திலக் கோவை


தன்னால் திரும்ப முடியவில்லையே என நினைந்து, அவன் வருந்துகின்றான்.')

இருவிசும்பு இவர்ந்த கருவி மாமழை
நீர்செறி நுங்கின் கண்சிதர்ந் தவைபோல்
சூர்ப்பனி பன்ன தண்வரல் ஆலயொடு
பரூஉப்பெயல் அழிதுளி தலைஇ வான்ந வின்று

குரூஉத்துளி பொழிந்த பெரும்புலா வைகறை
5


செய்துவிட் டன்ன செந்நில மருங்கிற்
செறித்துநிறுத் தன்ன தெள்ளறல் பருகிச்
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பினை
வலந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு

அலங்குசினைக் குருந்தின் அல்குநிழல் வதியச்
10


சுரும்பிமிர்பு ஊதப் பிடவுத்தளை அவிழ
அரும்பொறி மஞ்ஞை ஆல வளிமணல்
மணிமிடை பவளம்போல அணிமிகக்
காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவும்

ஈயல் மூதாய் ஈர்ம்புறம் லரிப்பப்
15


புலனணி கொண்ட காரெதிர் காலை '
'ஏந்துகோட்டு யானை வேந்தன பாசறை
வினையொடு வேறுபுலத்து அல்கி நன்றும்
அறவர் அல்லர்நம் அருளர் தோரென

நந்நோய் தன்வயின் அறியாள்
20


எந்நொந்து புலக்குங்கொல் மாஅ யோளே?

நெஞ்சமே!

பெரிதான வானத்திலே கார்மேகங்கள் தொகுதியாக எழுந்தன. நீர்செறிந்த நுங்கின் கண்கள் சிதறிக் கிடப்பதைப் போலத், தெய்வ நடுக்கத்தைப் போன்று உடலை நடுங்கச் செய்யும் குளிராக வருதலையுடைய, பனிக்கட்டியுடன் கூடியதான பருத்த பெயலாகிய மழையினையும் அம்மேகங்கள் பெய்யத் தொடங்கின. வானம் முழக்கமிட்டு, நிறம் வாய்ந்த மழைத்துளிகளைப் பொழிந்த இம் மழைக் காலத்திலே, பெரிதும் இருள்புலர்ந்ததாகிய வைகறை வேளையிலே -

செய்துவிட்டதுபோலத் தோன்றும் செம்மண்நிலப் பரப்பிலே, தேக்கித் தடுத்துவைத்தாற்போன்று விளங்கும் அறல்பட்ட தெளிவான நீரினைக் குடித்துவிட்டு, தன் சிறிய குட்டியை அணைத்தவாறே, துள்ளு நடையினையுடைய இளைய பெண்மானானது, வலந்திரிந்த கொம்புகளையுடைய