பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 211



(தலைவன் ஒருவன், தகையுடையாள் ஒருத்தியைக் கண்டு மிகவும் காதல் கொண்டவனானான். பல நாள் அவன் வந்து வந்து அவளை அடைதலை விரும்பியும் இயலாது வறிதே திரும்புவதற்கு நேர்ந்ததேயன்றி, அவள் இசைவும் உறவும் அவனுக்கு வாய்க்கவில்லை. இந்த நிலையிலே, அவன் தலைவியின் தோழிபாற் சென்று தன்குறையைக்கூறி இரந்து நிற்க, அவளும் அவனைக் கண்டு உண்மையுணர்ந்து இரக்க முற்றவளாகத், தலைவியிடம் அவனுக்கு இசையுமாறு கூறுகின்றனள். அந்த முறையோடு அமைந்த செய்யுள் இது)

தாழ்பெருந் தடக்கை தலைஇய கானத்து
வீழ்பிடி கெடுத்த வெண்கோட்டு யானை
உண்குளகு மறுத்த உயக்கத் தன்ன
பண்புடை யாக்கைச் சிதைவுநன்கு அறீஇப்
பின்னிலை முனியா னாகிநன்றும் 5

தாதுசெல் பாவை அன்ன தையல்
மாதர் மெல்லியல் மடநல் லோள்வயின்
தீதின் றாக நீபுனை புகுகென
என்னும் தண்டும் ஆயின் மற்றவன்
அழிதகப் பெயர்தல் நனிஇன் னாதே 10
 
ஒல்லினி வாழி தோழி! - கல்லெனக்
கணமழை பொழிந்த கான்மடி இரவில்
தினைமேய் யானை இனனிரிந்து ஓடக்
கல்லுயர் கழுதில் சேணோன் எறிந்த
வல்வாய்க் கவணின் கடுவெடி ஒல்லென 15

மறப்புலி உரற வாரணம் கதற
நனவுறு கட்சியின் நன்மையில் ஆல
மலையுடன் வெரூஉம் மாக்கல் வெற்பன்
பிரியுநள் ஆகலோ அரிதே அதாஅன்று
உரிதல் பண்பிற் பிரியுநன் ஆயின் 20

வினைதவப் பெயர்ந்த வென்வேல் வேந்தன்
முனைகொல் தானையொடு முன்வந்து இறுப்பத்
தன்வரம்பு ஆகிய மன்னெயில் இருக்கை
ஆற்றா மையிற் பிடித்த வேல்வலித்
தோற்றம் பிழையாத் தொல்புகழ் பெற்ற 25

விழைத்தக ஓங்கிய கழைதுஞ்சு மருங்கிற்
கானமர் நன்னன் போல
யான்ஆ குவல்நின் நலன்தரு வேனே.