பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

அகநானூறு - நித்திலக் கோவை


'களவும் புளித்தன; விளவும் பழுநின’ என்ற சொற்களுள் நிலவுதலைக் காண்க

ஈயல் - எறும்பின் ஆண். மழை வரவினால், உணவுச் சிக்கனத்தின் பொருட்டு, இவற்றை வெளியேற்றி விடுவது எறும்பினத்தின் இயல்பு. இதனையிட்டுப் புளிச்சோறு ஆக்கிய தன்மை, 'ஈயல் பெய்தட்ட இன்புளி வெஞ்சோறு’ என்றதனாற் புலனாகும். ஏவலருக்கு இந்தப் புளிச்சோற்றின் மேலே வெண்ணெயிட்டு, அது உருகச் சுவையுடன் அளிப்போம் என்பவள், தலைவனுக்குப் பாற்சோறு அளிப்பதாகக் கூறுவதன் மரபையும் அறிக. 'செவ்வாய்ச் சிற்றில் நின்மனையோள் அயர, ஒரு நாள் வந்தனை சென்மோ' என்றதால், தலைவியை வரைந்து மணந்துகொண்டு, அவள் உண்பிக்க உண்டு வாழ்தலையும் அறிவுறுத்தினள் என்க.

395. வந்தால் நன்று!

பாடியவர்: எயினந்தை மகனார் இளங்கீரனார். திணை: பாலை. துறை: பிரிவிடைத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

(தலைமகன், பொருள்தேடி வருகின்ற ஆர்வத்தினை உடையவனாகக், காடுபல கடந்து, வேற்று நாட்டிற்குச் சென்றிருந்தனன். அவனுடைய பிரிவினை நினைந்து நினைந்து உடலும் உள்ளமும் சோரத் துயருற்று வாடியிருந்தாள் அவனுடைய மனைவி. அங்ஙனம் இருந்த அவள். தன்னைத் தேற்றினவளாகிய தோழிக்குத் தன்னுடைய நிலையைக் கூறுகின்ற பாங்கிலே அமைந்த செய்யுள் இது)

தண்கயம் பயந்த வண்காற் குவளை
மாரி மாமலர் பெயர்குரற் றன்ன
நீரொடு நிறைந்து பேரமர் மழைக்கண்
பணிவார் எவ்வம் தீர இனிவரின்
நன்றுமன் - வாழி தோழி! - தெறுகதிர் 5

ஈரம் நைத்த நீர்அறு நனந்தலை
அழல்மேய்ந்து உண்ட நிழன்மாய் இயவின்
வறன்மரத்து அன்ன கவைமருப்பு எழிற்கலை
இறல்அவிர்ந் தன்ன தேர்நசைஇ ஓடிப்
புறம்புவழிப் பட்ட உலமரல் உள்ளமொடு 10

மேய்ப்பிணைப் பயிரும் மெலிந்தழி படர்குரல்
அருஞ்சுரம் செல்லுநர் ஆள்செத்து ஓர்க்கும்
திருந்தரை ஞெமைய பெரும்புனக் குன்றத்து
ஆடுகழை இருவெதிர் நாலும்
கோடுகாய் கடற்ற காடிறந் தோரே! 15