பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

அகநானூறு - நித்திலக் கோவை



விளக்கம் : "என் மகள் பெருமடம் யான் பாராட்ட' என்று செவிலி சொல்வது, அவளுடைய பாதுகாப்பிலே வளர்ந்தவள் தலைவியாதலால். 'கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமையே' மடம் என்பது. அதனைத் தலைவி பேணினால், அது செவிலிக்கே பெருமை தருவது ஆகும். ஆகவே, இப்போது அதற்கு வாய்ப்பின்றித் தலைவனுடன் தலைவி போயினளாதலின் இப்படி நினைந்து நோகின்றான்.

தாய் மணப்பெண்ணுக்குச் செய்யும் கடமைகள் பல மணவிழாவில் உண்டென்பதனைச் 'தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப' என்ற தொடர் உணர்த்தும்.

‘மணனிடையாகக் கொள்ளான்' என்ற சொற்கள் தலைவிக்குச் சிறப்பாக மணம் நிகழத்திக் காண அவர்கள் கொண்டிருந்த ஆசைப்பெருக்கைப் புலப்படுத்துவனவாம்.

'தணிந்த பருவஞ் செல்லான்’ என்றது, தலைவி காட்டினிடத்துச் செல்லலால் அடைகின்ற துயரங்களை எண்ணி வருந்திக், 'கோடையின் வெம்மை தணிந்த பருவத்தாவது கொண்டு சென்றானில்லையே?’ என்று நொந்து கொண்டதாம்.

'அவள் சென்றனள்’ என்னாது, அவன்கொண்டு சென்றனன்’ எனக்கூறி வருந்தும் உள்ளத்துச் செல்வியிலே, தலைவிபாற் கொண்ட பெரும் பேரன்பு தோன்றுதலை அறிந்தறிந்து இன்புறுக

398. சிதைகுவது உண்டோ?

'பாடியவர் : இம்மென் கீரனார். திணை : குறிஞ்சி. துறை: 'காமமிக்க கழிபடர் கிளவியால், வரைவிடத்துக்கண், தலைமகள், தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து சொல்லியது.

(தலைமகன், வரைவிடை வைத்துத் தலைவியைப் பிரிந்து சென்றிருந்தகாலத்தில், அவள் காமவாதையால் மிக்க துயருற்றவளாகி, அவன் வரையினின்றும் வருகின்ற ஆற்றினிடத்துத், தன் மனக்குறையைக் கூறி வருந்துவதாக அமைந்த செய்யுள் இது)

'இழைநிலை நெகிழ்ந்த எவ்வம் கூரப்
படர்மலி வருத்தமொடு பலபுலந்து அசைஇ
மென்தோள் நெகிழச் சாஅய்க் கொன்றை
ஊழுறு மலரின் பாழ்பட முற்றிய
பசலை மேனி நோக்கி நுதல்பசந்து 5