பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 225


இன்னேம் ஆகிய எம்மிவண் அருளான்
நூம்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று
 அலமரல் மழைககண் தெண்பனி மல்க
நன்று புறமாறி அகறல் யாழநின்
குன்றுகெழு நாடற்கு என்னெனப் படுமோ? 10

கரைபொரு நீத்தம்! உரைஎனக் கழறி
நின்னொடு புலத்தல் அஞ்சி அவர்மலைப்
பன்மலர் போர்த்து நாணுமிக ஓடுங்கி
மறைந்தனை கழியும் நிறறந்து செலுத்தி
நயன்அறத் துறத்தல் வல்லி யோரே! 15

நொதும லாளர் அதுகண் ணோடாது
அழற்சினை வேங்கை நிழல்தவிர்த்து அசைஇ
மாரி புரந்தா நந்தி ஆரியர்
பொன்படு நெடுவரை புரையும் எந்தை
பல்பூங் கானத்து அல்கி இன்றிவண் 20

சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ?
குயவரி இரும்போத்துப் பொருதபுண் கூர்ந்து
 உயங்குபிடி தழீஇய மதனழி யானை
வாங்கமைக் கழையின் நரலும்அவர்
ஓங்குமலை நாட்டின் வருஉ வோயே! 25

பெரிய ஆண்புலியானது தாக்கியதனாற் புண்ணுற்றதாகி வருந்தும் தன் பிடியானது தழுவிக்கொண்டிருக்க, வலிகுன்றிப் போயிருந்த களிற்றியானையானது, வளைந்த மூங்கிலினாற் செய்தமைத்த தூம்பினைப்போல ஒலிக்கின்ற, அவருடைய உயர்ந்த மலைநாட்டினின்றும் வருவோய்!

கரையைப் பொருதியவாறே வருகின்ற வெள்ளத்தை உடையோய்!

அணிகள் தம் நிலையினின்றும் நெகிழ்ந்து போதற்குக் காரணமாகி பிரிவுத்துன்பம் மிகுதியாக, அவா நினைவே மிகுந்த வருத்தத்துடனே, பலவும் வெறுத்துக் கூறியவளாகத் தங்கியிருந்து, மென்மையான தோள்களும் மெலிவுற்றுப் போக வருந்திக், கொன்றையினது முறையாக மலர்ந்த பூக்களை யொப்பப் பாழ்பட முற்றிவிட்ட பசலை படர்ந்துள்ள உடலினை நோக்கி, 'நெற்றியும் பசலையுறப்பெற்ற இத்தன்மையேமாகிய எமக்கு அருள் செய்யான் ஆயினான் எம் தலைவன்.'

'தும்மவனாகிய அவன் செய்த கொடுமைக்குக் கலங்கும் குளிர்ந்த கண்களினின்றும் தெளிந்த நீர் பெருகவும், அறநெறியினைக் கைவிட்டு நீங்குதல், நின் குன்று பொருந்திய நாட்டினை