பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 227


'நிற்றந்து செலுத்தி நயனறத் துறத்தல் வல்லியாரே' என்றது, 'நின் வருகையொடு அவரும் வருவேமென்றது பொய்த்து, நின்னைமட்டும் தந்து செலுத்தினராக, நயனற எம்மைத் துறத்தல் செய்த வன்கண்மை உடையவர்' என்றதாம்.

'ஆயின் நின்மேற் பகையில்லை' என்பாள். 'எந்தை பல்பூங் கானத்து அல்கி இன்றிவண் சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ?' என்றனள்.

'அழல் சினை வேங்கை' என்று குறித்தது, வரைந்து கோடற்குக் குறித்த காலத்தின் வரவினை நினைந்து கூறியதாகும்.

399. முயங்கலின்றி நீடார்!

பாடியவர்: எயினந்தை மகனார் இளங்கீரனார். திணை: பாலை துறை : தலைமகன் பிரிவின்கண் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

(தலைமகனின் பிரிவினிடத்தே வாடியிருக்கின்ற தலை மகளைத் தோழி தேற்றுவாளாக அவன் காலம் நீட்டித்திரான் என்று கூறும் முறையிலே அமைந்த செய்யுள் இதுவாகும்.)

சிமையக்குரல சாந்துஅருந்தி இருளி
அமையக் கானம் நாறும் கூந்தல்
நந்துதல் அரிவை! இன்னுறல் ஆகம்
பருகு வன்ன காதல் உள்ளமொடு
திருகுபு முயங்கல் இன்றியவண் நீடார்- 5

கடற்றடை மருங்கின் கணிச்சியின் குழித்த
உடைக்கண் நீடமை ஊறல் உண்ட
பாடின் தெண்மணி பயங்கெழு பெருநிரை
வாடுபுலம் புக்கெனக் கோடுதுவைத்து அகற்றி
ஒல்குநிலைக் கடுக்கை அல்குநிழல் அசைஇப் 10

பல்லான் கோவலர் கல்லாது ஊதும்
சிறுவெதிர்ந் தீங்குழற் புலம்புகொள் தெள்விளி
மையில் பளிங்கின் அன்ன தோற்றப்
பல்கோள் நெல்லிப் பைங்கால் அருந்தி
மெல்கிடு மடமரை ஓர்க்கும் அத்தம் 15

காய்கதிர் கடுகிய கவினழி பிறங்கல்
வேய்கண் உடைந்த சிமைய
வாய்படு மருங்கின் மலைஇறந் தோரே.

உச்சியிலே பூங்கொத்துக்களை உடையதாயும், மயிர்ச்சாந்து பூசப்பெற்றதாயும், இருட்சியுடையதாயும், இமயமலையிடத்துக்