பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 229


திருகுபு முயங்கல்’ எனக் குறித்தனர். அவள் கூந்தலின் வனப்பு, 'சிமையக் குரல்' எனவும், சாந்தருந்தி எனவும், இருளி எனவும், இமையக் கானம் நாறும் எனவும் கூறப்பட்டது.

'கணிச்சியிற் குழித்த உடைக்கண் நீடமை ஊறல்' என்பது, குந்தாலியினாற் பாறைகளை உடைத்துத் தோண்டப் பெற்ற கிணற்றுள், நெடுந்தொலைவான ஆழத்திலே ஊறிக்கிடக்கும் நீரைக் குறித்ததாம். இது, காட்டின் வறட்சியைக் காட்டுவதுடன், மேய்ப்போர்தம் நிரைகளைப் பேணுதற்குக் கொள்ளும் முயற்சிப் பெருக்கையும் காட்டுவதாகும்.

'காய்கதிர் கடுகிய கவினழி பிறங்கல் வேய்கண் உடைந்த சிமைய வாய்ப்படு மருங்கின் மலையிறந்தோரான காதலர், பருகுவன்ன காதல் உள்ளமொடு, ஆகம் திருகுபு முயங்கல் இன்றியவண் நீடார்’ என்று உரைத்து வற்புறுத்தியதாகக் கொள்ளுக.

400. நன்மை விளைப்பது!

பாடியவர்: உலோச்சனார். திணை: நெய்தல் துறை: தலைமகன் வரைந்து எய்திய பின்றைத் தோழி தலைமகளுக்குச் சொல்லியது.

(களவு உறவிலே திளைத்த தலைவியும் தலைவனும், இடையிற் பிரிவால் பட்ட துயரமெல்லாம் தீரும் நாள் வந்தது. தலைமகன் தலைவியை வரைந்து வருகின்றனன். தலைவியின் தமரும் இசைகின்றனர். அந்த மகிழ்ச்சியில், தம் கவலையும் ஊரலரும் ஒழிந்ததென்ற களிப்பில், தோழி தலைவியிடத்தே கூறுகின்ற முறையில் அமைந்த செய்யுள் இது)

நகைநன்று அம்ம தானே 'அவனொடு மனைஇறந்து அல்கினும் அல'ரென நயந்து
கானல் அல்கிய நம்களவு அகல
பல்புரிந்து இயறல் உற்ற நல்வினை நூல்

அமை பிறப்பின் நீல உத்திக்
5

கொய்ம்மயிர் எருத்தம் பினர்படப் பெருகி
நெய்ம்மிதி முனைஇய கொழுஞ்சோற்று ஆர்கை
நிரலியைந்து ஒன்றிய செலவின் செந்தினைக்
குரல்வார்ந் தன்ன குலவுத்தலை நந்நான்கு

வீங்குசுவல் மொசியத் தாங்குநுகம் தழீஇப்
10

பூம்பொறிப் பல்படை ஒலிப்பப் பூட்டி
மதியுடைய வலவன் ஏவலின் இகுதுறைப்
புனல்பாய்ந் தன்ன வாமான் திண்தேர்க்
கணைகழிந் தன்ன நோன்கால் வண்பரிப்

பால்கண்ட டன்ன ஊதை வெண்மணற்
15