பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

அகநானூறு - நித்திலக் கோவை



பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் (373)

இச் செய்யுளும் குறுந்தொகையின் 156ஆவது செய்யுளும் பாடியவர் இவர் கண்ணனார் இயற்பெயராகலாம். நெடுங் கண்ணனார் என இவரது உயர்வு போற்றப் பெற்றிருக்கலாம். 'ஏனாதி' படைத்துறைப் பொறுப்புக்களுள் ஒன்று. இதனாற் பாண்டியர் படையணிகளில் ஏனாதியாராகத் திகழ்ந்த நெடுங் கண்ணனார் இவரெனக் கொள்க. 'அண்ணல் யானை அடுபோர் வேந்தர் ஒருங்ககப்படுத்த' முரவுவாய் ஞாயில் ஒரெயில் மன்னன் போலத் துயில் துறந்தனள் கொல்? என்னும் இவர் சொற்கள், இவருடைய படைத்தொழில் அநுபவத்தினின்றும் எழுந்தன வாகலாம். 'தாழ்கை பூட்டிய தனிநிலை இருக்கை எனத், தலைவன் இருந்த நிலையினைக் கூறும் நுட்பமும் அறிந்து போற்றத்தக்கதாகும்.


பாலைபாடிய பெருங்கடுங்கோ (313, 337, 379)

பாலைத்திணைச் செய்யுட்கள் இயற்றுவதில் வல்லமை உடையவராய இவர், சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனின் மகனாகப் பிறந்து, தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையாகத் திகழ்ந்தவர் என்பர். பாலைக்கலியும் மற்றும் 23 செய்யுட்களும் இவராற் செய்யப்பெற்றவை. பேய் மகள் இளவெயினியார் பாடல் (புறம் 11) இவரை அரசரெனவும், இரவலரைப் புரக்கும் வள்ளலெனவும் உரைக்கும். பொருளின் தன்மையினைக் 'கிழவர் இன்னோர் என்னாது பழவினை மருங்கிற் பெயர்பு பெயர்பு உறையும்' எனவும், ஆள்பவரின் முறைகேட்டால் நாடு சீர்கெடும் என்பதனை, 'ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடு' எனவும் பாடிய சான்றாளர் இவர் ஆவர். 'அரவு நுங்கு மதியின் நுதவொளி கரப்ப', நிதயஞ் சொரிந்த நீவிபோலப் பாம்பூன் தேம்பும் வறங்கூர் கடம், 'ஒற்றுச்செல் மாக்களின் ஒடுங்கிய குரல், (313) 'தூதொய் பார்ப்பான் மடிவெள்ளோலை' (337) 'மரிதியஞ் செல்வம் பொதுமையின்றி நனவின் இயன்றதாயினும், கங்குற் கனவின் அற்றது அதன் கழிவே' (379) என இந்நூற் செய்யுட்களுள்ளும் இவர் நயம்பட உரைப்பவற்றை அறிந்து இன்புறுக.


பாவைக் கொட்டிலார் (336)

இவர் பாடியது இச்செய்யுள் ஒன்றேயாகும். கொட்டில் என்பது ஒருவகைக் குடிலாகும்.மாட்டுக்கொட்டில் என இன்றும் வழங்குதலை நினைக்க கொட்டிற்கண் வாழ்வாராகப் பாவை செய்து சிறுமியர்க்குஅளித்து வந்தவராக இவர் விளங்கினார் போலும். அன்றிப் பாவை வழிபாடு மேற்கொண்டிருந்தவரும் ஆகலாம். 'மாரியம்பின் மழைத்தோற் சோழர் வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை ஆரியர் படையின் உடைக