பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அகநானூறு - நித்திலக் கோவை


சொற்பொருள் : 1. யாமம் - இரவின் ஒரு கூறு; இரவும் எனவும் பாடம். 2. தவலில் நீக்கமற நீத்தம் - வெள்ளம். ஐஎன மெல்லென.3தளி-மேகம்.4.பனி-துன்பம். பனிமீக்கூரும் பைதற்பானாள் - பனியும் மிகுதியாகப் பெய்கின்ற வருத்தத்தையுடைய நள்ளிரவும் ஆம். 5. பல்படை - பலவாகப் படைக்கப்பட்ட, அடுக்கடுக்காக மெத்தைகள் அமைந்த நிவந்த உயர்ந்த, 6 பருகுவன்ன - பருகுதலைப் போன்ற காதல், பருகுவன்ன காதல் என்று கூறப்பெற்றது. இஃது இருவரும் தம்முட் காதலால் மிகுந்தவராகிப் படுக்கையிற் சேர்ந்திருந்த தன்மையைக் குறிப்பதாம். 7. கைகவர் முயக்கம் - இருவரும் ஒருவரையொருவர் தம் கைகளாலே வளைத்துத் தழுவியிருக்கும் நிலை. 8. ஒருயிர் மாக்கள் - உடலால் இருவரேனும், உயிரால் ஒன்றாயின கலந்த காதற்பெருக்குடையவர். 10. இடும்பை - துன்பம், நைந்து நைந்துபடும் வேதனை. 1. எவன் உளனோ? - எங்ஙனம் இருப்பேனோ? 12. சேக்கும் தங்கியிருக்கும். 13. உயவுக் குரல் - வருத்தக் குரல் 15. கனைஎரி சுடர்விட்டு எரிகின்ற நெருப்பு.16. நினையா மாக்கள் - நம் துயரைப்பற்றி எண்ணாத பேதை மாக்கள்.

விளக்கம் : “கைகவர் முயக்கத்து ஒருயிர் மாக்களும் புலம்புவர்.யானெவன் உளனோ?” என்று கூறுதலிலே புலப்படுகின்ற ஆற்றாமையின் மிகுதியை எண்ணிக் காண்க. 'அருளிலாளர் என்றது, தன் நிலையறிந்தவரா யிருந்தும் பிரிய நினைந்த கொடுமையினால், 'பொருள் வயின் அகல" என்று சொல்வதும், 'யான் எவன் உளனோ? என்பதும் தன்னினும் காட்டில் பொருளினிடத்தே அவர் கொண்ட காதன்மிகுதியைப் புலப்படுத்தி நொந்துகொள்கின்றதனை உணர்த்துவனவாம். அன்றிலின் உயவுக்குரல் கேட்டு உள்ளே கனலும் உள்ளம், கோவலரின் தீங்குழல் ஒலிகேட்டுக் கனையெரியாகிப் பிறக்கும் தன்மைபோல, அவரது வரப்போகும் பிரிவை நினைந்தே கலங்கும் உள்ளம், பிரிவும் வந்துறின், கொதிப்புற்றுத் தன்னையே அழித்துவிடும் என்பதுமாம்.

தோழிக்குத் தலைமகள் சொல்வதாயின், இவ்வாறு பொருள் கொள்ளுதல் பொருந்தும். தோழி தலைமகட்குச் சொல்வதாகக் கொள்ளின், தலைவியின் நிலைக்கு இரங்கி வேதனைப்பட்டு, அவள் கொள்ளும் துயரமாக, 'யானெவன் உளனோ தோழி? என்று தக்கவாறு பொருளுரைத்து முடித்துக் கொள்ளுக. 'உடனுறைபவரும் வாடைக்காற்றாது துயருறுகின்ற போதிலே, பிரிவின் எவ்வத்தோடு வாடையினாலும் இடும்பையுற்ற நெஞ்சத்தை நீ அடையின், அன்றிலின் உயவுக்குரல் கேட்டு உள்ளே கனலும் உள்ளம்போலப்