பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 255



கழுவுள் (365)

இவன் ஒரு குறுநிலத் தலைவன். காமூர் இவனுக்கு உரியதாகும். இவனுரைப் பதினான்கு வேளிரும் முற்றி அழித்த செய்தியை அகநானூற்று 135ஆவது செய்யுளிற் பரணர் குறிக்கின்றனர். இவனைத் தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை அடக்கினான் எனப் பதிற்றுப்பத்தும் உரைக்கும். இச் செய்யுளுள், இவனுடைய பெரியதான வள்ளன்மையினையும், இவனுடைய காமூரிடத்தே பூதந்தந்த பொரியரை வேங்கை இவனுடைய காவன்மரமாகத் திகழ்ந்த சிறப்பையும் மதுரை மருதனிளநாகனார் கூறுகின்றனர்.

கானர் செல்வி (345) இவள் காடுகிழாள் எனப் போற்றப்பெறும் கொற்றவை வாள். இவளைப் பற்றிக் கூறுகின்ற இந்தச் செய்யுள், இவள் "வெண்மையான கால்களையும் பல படைகளையும், உடைய குதிரையினைத் தொல்லிசை நுணங்கு நுண்பனுவற் புலவன் ஒருவனுக்கு அளித்த செய்தியைக் கூறுகின்றது. உரைப்பவர் குடவாயிற் கீரத்தனார் என்னும் புலவர் ஆவார்.

கிள்ளி வளவன் (346) இவனை, ஐயூர் முடவனாரும் நக்கீரனாரும் பாடினர். அதனுள் நக்கீரரின் செய்யுள் இது. சோழர்களுள் கிள்ளிப் பெயருடையோருள் இவனும் ஒருவனாக, இப்புலவர் பெரு மக்களின் காலத்தவனாக இருத்தல்கூடும். சோழன் குராப் பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆகிய இருவருள் பின்னையோன் இவனாகலாம் எனவும் கருதுவர். இவனைச் சோழர் படைத் தலைவருள் ஒருவராகவும் கூறுவர். இவன், கூடலையாண்ட பழையன் மாறனை வென்று, அவனுடைய குதிரைகளையும் யானைகளையும் கைக்கொண்டதனையும், அதனை அறிந்து அப்பழையன் மாறனிடத்து முன்னர்த் தோல்வியுற்று, அதனாற் கொதித்திருந்த கோதை மார்பன் உவப்படைந்ததாகவும் இச்செய்யுளிற் கூறப்பெற்றுள்ளமை காண்க

குட்டுவன் (376) சேரநாட்டின் குட்டநாட்டிற்குத் தலைமை உடையவர்கள் குட்டுவர்கள் எனப்பெற்றனர். இந்தச் செய்யுளுள் குட்டுவர்க்கு உரித்தான மாந்தை நகரின் வளத்தினைப் பரணர் உரைக்கின்றனர். பரணரே செங்குட்டுவனைப் பாடியவரும். ஆகவே, இச்செய்தியும் அவனையே குறித்ததாகலாம்.

கொங்கர் (368) சேரர் குடும்பத்தாருள் ஒருவர் கொங்குக் கருவூரின்கண் இருந்து இந்நாட்டைப் பலகாலம் ஆட்சி செய்தனர். இச்செய்யுளுள் மதுரை மருதன் இளநாகனார், இவர்கள்