பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அகநானூறு - நித்திலக் கோவை


பரந்துகிடக்கும் பொய்கையினிடத்தான பிரப்பங் கொடி யோடு ஈங்கையும் சேர்ந்து நீண்டு வளர்ந்து கிடக்கும்; அந்த ஈங்கையிடத்துப் பஞ்சுபோன்ற உச்சியினையுடைய புதுப்பூக்கள் விளங்கும்; அப்பூக்களும், மாமரத்தின் ஈனப்பட்ட இளந்துளிரும் தன்னை வருடிக் கொண்டிருக்க நாரையானது மீனுண்டு விட்டதாகிப் பின் உறங்கியபடியிருக்கும். இத்தகைய நீர்வளம் சூழ்ந்துள்ள வளமான வயல்களிடத்தே நன்செய்க் கரும்புகளும் விளங்கும். அக்கரும்புகள் சாய்ந்து கிடக்கும் பக்கமாக, வயலாமைகள் ஊர்ந்து சென்று இளவெயில் காய்ந்து கொண்டிருக்கும். இத்தகைய நெல்வளம் கொண்ட தெருக்கள் அமைந்த, நன்மை பொருந்திய ஊருக்கு உரியோனாகிய தலைவனே!

மாட்சியுடைய நிலவினைப் அழகு விளங்கும் ஒளிகொண்ட நெற்றியினையும், விளங்கும் அணிகளையும் கொண்டவளான பரத்தை ஒருத்தி, இகழ்ச்சியான சொற்களைச் சொன்னாள். அழகிய இதழ்களையுடைய குளிர்ச்சியான தன் கண்கள் சிவப்புற, நின்பால் நோய் வந்தடையும்படியாக, நின்னுடனே ஊடிச் சினந்து நோக்கினாள். குளிர்ச்சியான மணம் விளங்குகின்ற நின் மாலையினையும் பறித்து எறிந்தாள். இவ்வாறாக, அவள் நும்முடன் ஊடியதுடன், எம்முடைய மணல் மிகுந்த தெருவழியாகச், சிறிதளவு எமக்குத் துயரமும் செய்தவளாகிச் சென்றனளும் அல்லளோ?

நின் தலைமைப் பண்பு என்பதெல்லாம் இத்துணை தானோ? எனவே, நீ இவ்விடம் விட்டு அகல்க. (நின்னை யாம் மதித்து ஏற்பதற்கு இசையோம் என்பது குறிப்பாகும்)

சொற்பொருள் : 1. பெயர் - புகழ் மகிழ்ந - தலைவ. 2. பிரம்பு - பிரப்பங்கொடி, துய்த்தலைப் புதுவீ - பஞ்சு போன்ற உச்சியினையுடைய புதுப்பூக்கள். 4 மாத்தின் மாமரத்தின் ஆர் குருகு - மீனுண்ட நாரை, 2 சாய்ப்புறம் - சாய்ந்து கிடக்கின்ற பக்கம்; இன்றும் 'சாய்ப்பு என்ற சொல் தென் தமிழ்நாட்டிலே வழங்குவதனை அறிக 6 கழனிக் கரும்பு - நன்செய்க் கரும்பு நீர் மிகுதியால் நன்கு வளர்வது இது. புன்செய்க் கரும்பு நீரின் மிகுதியினாலே அழுகிப் போவதாம். 7. பசு வெயில் - பசுமையான வெயில் இளவெயில், மாலைக் காலத்து வெயில்.8.மறுகு தெரு. நன்னர் ஊர் . நன்மை பொருந்திய ஊர். 13. பரீஇனள் - அறுத்தனளாக. 14. துனி - கலகம்.

உள்ளுறை உவமப்பொருள் : ஆர்குருகு ஈங்கைப் புதுப்பூவும் மாவின் இளந்தளிரும் வருடக் கிடந்து நாரை