பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அகநானூறு - நித்திலக் கோவை



'கடிபுனந் துழைஇய ஒருத்தலிற் பெயர்குவை' என்றது, புனத்தழிவு கண்ட காவலர், தம்மைக் கரந்து சென்றுவிட்ட யானையினைத் தொடர்ந்து சென்று அழிக்கும் ஆற்றலும் சினமும் உடையவராவர் என அறிவித்ததாம்.

'கூந்தல் மெல்லணைத் துஞ்சி' என்ற தொடரின் நயத்தினை அறிந்து இன்புறுக. இதனால், அவன்பால் ஆராக் காத லுடையவள் தலைவி என்பதனை நயமுடன் உரைக்கின்ற செவ்வியினையும் காண்க

309. நாமே சென்றால் என்ன?

பாடியவர் : கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்; கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் எனவும் இவர் பெயர் வழங்கும். திணை: பாலை துறை : பிரிவிடை வேறுபட்ட தலைமகனது வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. சிறப்பு : கூத்தர்கள் நற்போர் வானவனின் சேவடியினை நாடிச் செல்லுகின்றதான அவனது வள்ளன் மையும், அவ் வானவனின் குதிரைப் பெரும்படையின் சிறப்பும்.

(தலைவியைப் பிரிந்து தலைவன் வினைமேற் சென்றிருந்த காலத்திலே, தலைவி துயரத்தால் அடைந்த வேறுபாட்டினைக் கண்டு அவளுடைய தோழி தானும் வருந்திச் சோர்ந்து விடுகின்றாள். அப்போது, தோழியின் வேறுபாட்டைப் போக்கும் வகையாகத் தலைவி சொல்வதாக அமைந்தது இச்செய்யுள்)

          வயவாள் எறிந்து வில்லின் நீக்கி
          பயநிரை தழிஇய கடுங்கண் மறவர்
          அம்புசேண் படுத்து வன்புலத்து உய்த்தெனத்
          தெய்வஞ் சேர்ந்த பராரைவேம்பிற்
          கொழுப்பா எறிந்து குருதி தூஉய்ப் 5

          புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறைக்
          களிறுபுறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து
          அரலை வெண்காழ் ஆலியின் தாஅம்
          காடுமிக நெடிய என்னார் கோடியர்
          பெரும்படைக் குதிரை நற்போர் வானவன் 1O

          திருந்துகழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு
          நாஞ்செலின் எவனோ - தோழி! - காம்பின்
          விளைகழை உடைந்த கவண்விசைக் கடிஇடிக்
          கனைசுடர் அமையத்து வழங்கல் செல்லாது
          இரவுப்புனம் மேய்ந்த உரவுச்சின் வேழம் 15