பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

அகநானூறு - நித்திலக் கோவை


பாடம்; வனை - அழகிய 14. வழங்கல் - இயங்கல்; நடமாடல். 15. உரவு - வலிமை.

விளக்கம் : “வானவனின் திருவடிகளை நாடிச் செல்லும் கூத்தர் தாம் பெறுகின்ற பேரின்பத்தை உளங்கொண்டு, வழியிடைப் படுந் துயரை எல்லாம் பாராட்டாது செல்வது போன்று, நாமும் நம் காதலரை நாடிச் செல்வோமா?” என்றனள். கூத்தரின் வறுமைநிலை போன்றது தன் ஏக்கநிலை எனவும், அஃது அவர் அருள்பெறின் அன்றிப் பிற யாதானும் மாறாது எனவும், உரைத்தனள்.

காவலரின் கவண் கல்லால் அடிபடற்கு அஞ்சி, இரவிலே புனத்தை மேயச்சென்ற வேழம், படாஅரைக் கண்டு காவலரோ என அஞ்சுவது, அது செய்யமுனைந்த களவுத் தொழிலினாலே உண்டாகும் அச்சம் என்க.

310. கூப்பிடு தூரமே!

பாடியவர் : நக்கீரனார். திணை : நெய்தல். துறை : தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி சொல்லியது.

(தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியைக் கண்டு காதலுற்றான். பலநாளும் அவள் நினைவாகிய ஏக்கத்தினாலே, அவளையே சுற்றிக் கொண்டும் இருந்தான். அவளும் அவனை விரும்பத் தொடங்கினாள். ஆயினும் மடம் குறுக்கிட்டுத் தடுத்துவிடுகிறது. இந்நிலையிலே அவன் குறையினைத் தீர்க்க இசைந்த தலைவியின் தோழி, அவனிடத்துக் கூறும் தன்மையினை உடையது இச்செய்யுள்)

          கடுந்தேர் இளையரொடு நீக்கி நின்ற
          நெடுந்தகை நீர்மையை அன்றி நீயும்
          தொழுதகு மெய்யை அழிவுமுந் துறுத்துப்
          பன்னாள் வந்து பணிமொழி பயிற்றலின்
          குவளை யுண்கண் கலுழ நின்மாட்டு 5

          இவளும் பெரும்பே துற்றனள் ஒரும்
          தாயுடை நெடுநகர்த் தமர்பா ராட்டக்
          காதலின் வளர்ந்த மாதர் ஆகலின்
          பெருமடம் உடையரோ சிறிதே; அதனால்
          குன்றின் தோன்றும் குலவுமணற் சேர்ப்ப! 1O

          இன்றிவண் விரும்பா தீமோ சென்றப்
          பூவிரி புன்னை மீதுதோன்று பெண்ணைக்
          உம்கண் ணஃதே தெய்ய - ஆங்கண்