பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அகநானூறு - நித்திலக் கோவை


குளிர்ச்சியான நம் கண்கள் சிவக்குமாறு, நாளைப் பொழுதிலே, மிகவும் மகிழ்ச்சியுடனே நாம் நீராடி மகிழ்வோம், வருவாயாக.

சொற்பொருள் : 1. உடம்படுதல் - ஒன்றுபடுதல்; இருவர் நெஞ்சமும் காதலால் ஒருநிலையினை அடைந்திருத்தல், ஒன்று -ஒப்பற்றதாகிய வரைதல்.புரிந்து அடங்கி-விருப்புற்று அமைந்து. 2. இடும்பை - துயரம்.4 வீங்கு பெயல் - மிகுதியான மழை. நீத்தம் - வெள்ளம். 5. கெளவை - பழிச்சொற்கள். 9. அடுக்கம் - மலையடுக்குகள். 12. வெல்போர் வழுதி - போரிலே வெற்றிகாணும் ஆற்றலையுடைய பாண்டியன்.

விளக்கம் : "நீத்தம் வரையக் கருதும் ஆயின் ஆடுகம் வம்மோ எனவும், நீத்தம் அரிமதர் மழைக்கண் சிவப்ப அவன் மார்பு புனையாக ஆடுகம் வம்மோ எனவும், கூட்டிப் பொருள்கண்டு இன்புறுக இடித்து முழக்கி மின்னலிட்டுக் கால் வீழ்த்துப் பெய்யும் மழைக்கும், வெல்போர் வல்ல பாண்டியன் மாற்றாரை எதிர்த்துச் சென்று வெற்றி கொள்ளும் போருக்கும் ஒப்புக் கூறுகிற நயம் சிறப்புடையது.

'கார்காலத் தொடக்கம் வந்தது' என்பதனால், அது வரைந்துகோடற்கு உரிய காலம் என்பதனை உளங்கொண்டு அவனை அம்முயற்சியிற் செலுத்துவாளாகக் கூறினள் என்க. 'நாளை அவன் மார்பு புணையாக நீத்தத்து அரிமதர் மழைக்கண் சிவப்ப ஆடுவோம்’ என்ற துணிவுரை, இரவுக் குறியிடத்துக்கு வருவதற்கு நேரிடுகிற இடையூறுகளையும், வீட்டவர் அறிந்தமையினையும், ஊரவர் எழுந்தமையினையும் இனி யாம் பொருட்படுத்தோம்! அவனுடன் பகற் போதிலே துணிந்துசென்று நீர்விளையாடலும் செய்வோம் என்னும் கவலை நீங்கிய உள்ளத்தினோடு கூடிச் சொன்னதாகும்.

313. அருள் புரிந்து வருவர்!

பாடியவர் : பாலை பாடிய பெருங்கடுங்கோ. திணை : பாலை. துறை : பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

(தலைமகன் பொருள்தேடி வரும்பொருட்டாக வேற்று நாடு சென்றிருந்தனன். அவன் காதலியோ பிரிவின் கொடுமையினால் உடலும் உள்ளமும் நலிந்தவளாயினாள். அப்போது, அவளின் நிலையினைக் கண்ட தோழி, அவளைத் தேற்றுவாளாகக் கூறுகிற பான்மையில் அமைந்தது இச்செய்யுள்)

          ‘இனிப்பிறி துண்டோ? அஞ்சல் ஓம்பென!'
          அணிக்கவின் வளர முயங்கி நெஞ்சம்