பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 43


(இரவுக் குறியிடத்தே காதலர் சந்தித்து வருகின்ற காலம். தலைவன் வரும் வழியின் ஏதமும் பிறவும் அவளுள்ளத்தை வருத்துகின்றன. திருமண நாட்டமும் எழுகின்றது அதனால், அவனிடத்தே இங்ஙணம் கூறுகின்றனள். இவ்வாறு அமைந்தது இச்செய்யுள்)

கான மானதர் யானையும் வழங்கும்
வான மீமிசை உருமுநனி உரறும்
அரவும் புலியும் அஞ்சுதக வுடைய
இரவழங்கு சிறுநெறி தமியை வருதி

வரையிழி யருவிப் பாட்டொடு பிரசம்
5

முழவுச்சேர் நரம்பின் இம்மென இமிரும்
பழவிறல் நனந்தலைப் பயமலை நாட!
மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றே
இன்றுதலை யாக வாரல் வரினே

ஏமுறு துயரமொடு யாமிவண் ஒழிய
1O

எற்கண்டு பெயருங் காலை யாழநின்
கற்கெழு சிறுகுடி எய்திய பின்றை
ஊதல் வேண்டுமாற் சிறிதே-வேட்டொடு
வேய்பயில் அழுவத்துப் பிரிந்தநின்

நாய்பயிர் குறிநிலை கொண்ட கோடே!
15

விலங்கினம் இயங்குகின்ற காட்டிடத்து நெறியின் கண்ணே, காட்டியானைகளும் இயங்குவனவாகும். வானத்து உயர்ந்த உச்சிக்கண்ணே இடிமுழக்கமும் பெரிதாக எழும். பாம்பும் புலியும் வழங்கும் அக்காடு அச்சந்தரும் தன்மையினையும் தன்பாற் கொண்டது. இரவு நேரத்தில், அத்தகைய சிறுநெறி வழியே தன்னந் தனியனாக நீயும் வருகின்றனை!

மலையினின்று இழியும் அருவியின் இன்னொலியோடு வண்டினங்களும் இணைந்தனவாக, முழவொலியுடன் இணைந்து எழுகின்ற யாழ்நரம்பின் ஒலிபோல ஒலியெழுப்பிக் கொண்டிருக்கும், பழைதான ஆற்றல்கொண்ட, அகன்ற இடத்தினையுடைய பயன்நிறைந்த மலைநாட்டின் தலைவனே! நீ திருமணத்தை விரும்பினாலும் அதனைப் பெறுபவன் ஆவாய். ஆயின்-

இன்று முதலாக நீ இரவுநேரத்தில் வாராதே. வருவாயானால், எம்மை மயக்கமுறச்செய்து அடைகின்ற துயரத்தினை யாம் இவ்விடத்தேயே நீக்கிக் கொள்ளுமாறு. என்னைக் கண்டுவிட்டு நீங்குகின்ற பொழுதிலே, கற்கள் பொருந்திய நின்னுடைய சிற்றூரினை நீ சென்றடைந்ததன் பின்னர், மூங்கில்