பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 45


(தலைமகன் பொருள் கருதியவனாகத் தலைவியைப் பிரிந்து வேற்றுநாடு செல்லுதற்கு முற்படுகின்றவன், தோழியிடத்து அச்செய்தியைக் கூற, அவள் தலைவியின் ஆற்றாமை மிகுதியை எடுத்துக் காட்டி, அவன் போக்கினைத் தடை செய்பவளாக இவ்வாறு உரைக்கின்றனள்:)

மணிவாய்க் காக்கை மாநிறப் பெருங்கிளை
பிணிவீழ் ஆலத் தலங்குசினை ஏறிக்
கொடுவில் எயினர் குறும்பிற் கூக்கும்
கடுவினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்

படுபிணங் கவரும் பாழ்படு நனந்தலை
5

அணங்கென உருத்த நோக்கின் ஐயென
நுணங்கிய நுசுப்பின் நுண்கேழ் மாமைப்
பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய
நன்னிறத் தெழுந்த சுணங்கணி வனமுலைச்

சுரும்பார் கூந்தற் பெருந்தோள் இவள்வயிற்
1O

பிரிந்தனிர் அகறல் சூழின் அரும்பொருள்
எய்துக மாதோ நுமக்கே கொய்குழைத்
தளிரேர் அன்ன தாங்கரு மதுகையள்
மெல்லியள் இளையள் நனிபேர் அன்பினள்

'செல்வேம்' என்னும் நும்மெதிர்
15

'ஒழிவேம்' என்னும் ஒண்மையோ இலளே!

கருமணியினைப் போன்ற வாயினவான காக்கையின் கருநிறப் பெருஞ்சுற்றமானது, பிணிப்புண்டு வீழ்ந்திருக்கும் விழுதுகளையுடைய ஆலமரத்தின் அசைகின்ற கிளைகளிலே ஏறியிருந்து.

வளைந்த வில்லினையுடைய எயினரது குறும்பிற்கு, ஊக்கத்துடன் படைகொண்டு எழுகின்ற கொடுந் தொழிலினையுடைய மறவர்கள், வில்லிட்டு எய்தலால் இறந்து வீழ்ந்தோருடைய பிணங்களைக் கவர்ந்து உண்ணுகின்ற தன்மையினையுடைய, பாழ்பட்டுக்கிடக்கின்ற அகன்ற பாலையினிடத்திலே,

தெய்வத்தைப் போன்ற உருத்த நோக்கினையும், அழகிதென நுணுகிய இடையினையும், நுண்மையாகப் பொருந்திய மாமைப் புள்ளிகளையும், பொன்போன்ற பூக்களைக் கொண்ட வேங்கை மரத்தின் புதுமலரைப் போன்ற தேமலை அணிந்திருக்கும் நல்ல மார்பிடத்து எழுந்துள்ள அழகிய முலைகளையும், வண்டினம் மொய்த்து ஆரவாரிக்கும் கூந்தலினையும், பெருத்த தோள்களையும் உடைய, நும் காதலியான இவளிடத்திருந்தும் பிரிந்தவராக நீங்கிப்போதலைக் கருதினீரானால்-