பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

அகநானூறு -நித்திலக் கோவை


விளக்கம்: 'திமிலோன் தந்த வயமீன், செல்வத் தங்கையர் விழவயர் மறுகின் விலையெனப் பகரும், கானலஞ் சிறு குடிப் பெருநீர்ச் சேர்ப்ப என்றது, 'அதனை உண்டு மகிழும் அம்மறுகினர்போல, நீயும் முயற்சி ஏதுமின்றி நல்லூழால் இவளை அடைந்து இன்புற்றனை' என்றதாம்.

'மலரேர் உண்கண் எந்தோழி அவ்வம், அலர்வாய் நீங்க நீ அருளாய் பொய்ப்பினும், வண்டற்பாவை சிதைய வந்து தோள் புதிது உண்ட ஞான்றைக் கடலறி கரியாக உரைத்த சூளும் பொய்யோ?' என்றது, 'எமக்கு அருள்தலும்; எம் எவ்வம் துடைத்தலும் நின் கடமையாயிருக்க, அதனை மறந்தனை யேனும், கடல்தெய்வம் சான்றாகச் சூளுரைத்தனையே அதையேனும் பேண வேண்டாமோ?' என்று ‘தெய்வக் குற்றம் நேரும் எனக் கூறி உச்சரித்ததாம். இதனால், அவன் விரையவந்து தலைவியை மணப்பான் என்பதும் அறியப்படும்.

321. என்ன செய்வாளோ?

பாடியவர்: கயமனார். திணை: பாலை. துறை: மகட் போக்கிய செவிலி சொல்லியது.

(இளையோள் ஒருத்தி தன் களவுக் காதலுனுடனே கூடியவளாக உடன்போக்கிலே சென்றுவிடுகின்றனள். அவளைப் பேணி வளர்த்த செவிலித்தாய், கோடைக்காலத்திலே. கொடுவழி யூடே செல்லத்துணிந்த மகளது பிரிவினை எண்ணி ஏங்கித் துயருறுகின்றாள். பொழுது சாயவும், அவள் நினைவோட்டம் இப்படிச் செல்ல, அவள் தன் உள்ளத்துடன் இவ்வாறு கூறிக் கொள்ளுகின்றாள்.)

பசித்த யானைப் பழங்கண் அன்ன
வறுஞ்சுனை முகந்த கோடைத் தெள்விளி
விசித்துவாங்கு பறையின் விடரகத்துஇயம்பக்
கதிர்க்கால் அம்பினை உணிஇய புகல்ஏறு

குதிர்க்கால் இருப்பை வெண்பூ உண்ணாது
5

ஆண்குரல் விளிக்கும் சேண்பால் வியன்சுரைப்
படுமணி இனநிரை உணிஇய கோவலர்
விடுநிலம் உடைத்த கலுழ்கண் கூவல்
கன்றுடை மடப்பிடி களிறொடு தடவரும்

புன்றலை மன்றத்து அம்குடிச் சீறுர்
1O

துணையொடு துச்சில் இருக்கும் கொல்லோ?
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு
எல்லி முன்னுறச் செல்லும் கொல்லோ?