பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 49


எவ்விணை செயுங்கொல்? நோகோ யானே!-அரிபெய்து பொதிந்த தெரிசிலம்பு கழிஇ
15

யாயறி வுறுதல் அஞ்சி
வேய்உயர் பிறங்கல் மலையிறந் தோளே!

பரற்கற்களை உள்ளிடாகப் பெய்து மூட்டுவாயினைப் பொதிந்து அழகிதாக ஆராய்ந்து அணிந்திருந்த தன் காற்சிலம்புகளையும் நீக்கிவிட்டாள்; தன் தாய் தன்னுடைய ஒழுக்கத்தை அறிவாளோ என அஞ்சிய அவள், தன் தலைவ னுடன் கூடியவளாக, மூங்கில் உயரமாக வளர்ந்திருக்கும் சாரலையுடைய மலைவழியூடுங் கடந்து செல்பவளாயினாள். அத்தகைய என் மகள்

பசியினை உடைய யானையின் அழகிழந்த கண்ணினைப் போன்று நீர் வறண்டதாகிக் காய்ந்து கிடக்கும் சுனையுள், புகுந்துவரும் மேல்காற்றின் தெளிவான ஒலியானது. தோலினை இழுத்துக்கட்டிய பறையொலியினைப் போல மலைப் பிளப்புக்களிடத்தே ஒலிக்கவும்

மெலிந்து நீண்ட கால்களையுடைய தன் அழகிய பிணையானது உண்பதற்காக, அதன்பால் விருப்பமுடைய அதனுடைய ஆண்மானானது, குதிர்போன்ற அடிமரத்தையுடைய இருப்பைமரத்தின் வெண்மையான பூக்களைத் தான் உண்ணாததாக, தன் ஆண்மைக்குரல் தோன்ற, தன்பெண் மானைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கவும்- விளங்குகின்ற தொலைவிடத்ததாகிய-

பெரிதான பால்மடியினையும், ஒலிமுழங்கும் கழுத்து மணியினையும் உடையவான ஆனிரைகள் உண்ணும் பொருட்டாக, அவற்றை மேய்ப்போரான ஆயர்கள் பிளப்புண்டு கிடந்த நிலத்தினை உடைத்து ஆக்கிய, கண்ணீ ர் கசிவதுபோல் நீர் கசிந்து வந்துகொண்டிருக்கும் கூவலைக், கன்றினையுடைய இளைய பெண்யானையானது தன் களிற்றுடனும் கூடியதாகத் தடவிப்பார்க்கும், அழகிழந்த இடமாகிய மன்றத்தையும் அழகிய குடியிருப்பினையும் உடைய சிற்றுாரினிடத்தே-

இரவில், தன் துணைவனுடனே, ஒதுக்கிடத்தே அச்சமின்றித் தங்கியிருப்பாளோ? அன்றி அம்பேவி ஆறலைக்கும் கொடியார்க்கு அஞ்சாத தறுகண்மையினைக் கொண்ட காளையாகிய தன் காதலுனுடனே, அவனுக்கு முன்னராகத் தான் நடந்து சென்று கொண்டிருப்பாளோ? அதனை நினைந்து யான் நோகின்றேனே!