பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

அகநானூறு - நித்திலக் கோவை


சொற்பொருள்: 1. பழங்கண் - பசியால் அழகற்ற கண் 2. வறுஞ்சுனை - வறட்சியுற்றுக் கிடக்கும் சுனை. கோடை - மேல்காற்று. விளி ஒலி. 3. விசித்து வாங்கல் - இழுத்துக் கட்டுதல் விடரகம் - மலைப் பிளப்புக்கள். 4. கதிர்க்கால் - நீண்ட மென்கால். புகல் - விருப்பம். 5. குதிர்க்கால் - குதிர் போற் பருத்த அடிமரம். 6. ஆண்குரல் - ஆண்மைக் குரல் 8. கூவல் - சிறுகிணறு. விடுநிலம் - தரிசுபட்ட நிலம்; பிளந்து கிடக்கும் நிலமுமாம். 11. துச்சில் - ஒதுக்கிடம்; சிறு குடிலுமாம். 12. கணையோர் - வில்லேந்திக் கணைதொடுப்போரான ஆறலைக் கள்வர். கடுங்கண் - தறுகண்மை.13. எல்லி - இரவு 15. பொதிந்த மூட்டு - வாய் மூடியுள்ள.

விளக்கம்: மணப்பதற்கு முன், அந்நாளைய கன்னியர், தம் சிலம்புகளை நீக்கிகொள்வது மரபு இதனைச் சிலம்பு கழி நோன்பு என்பர். சிலம்பினைக் கழித்து, அவள் சென்றனள் என்பதும் புலப்படும். அவள் அங்ஙனம் சென்றது, தன் தாய் தன்னுடைய களவு உறவினை அறிந்ததற்கு அஞ்சி எனவும் கூறினர். இனி, இரவில் வெளியேறி வீட்டைவிட்டு அகலுங்கால், அரிபெய்த சிலம்பின் ஒலிமுழக்கங் கேட்பத், தாய்தன் போக்கினைத் தடுத்துவிடுதலை அஞ்சியவளாக, அவற்றைக் கழற்றிவைத்துச் சென்றனள் எனவும் கூறலாம்.

'பசித்த யானைப் பழங்கண் அன்ன வறுஞ்சுனை முகந்த கோடைத் தெள்விளி, விசித்து வாங்கு பாறையின் விடரகத்தியம்ப' என்றது. கோடையின் கொடுமையைக் கூறியதாம். சுனை வறட்சியினாற் காற்றுப்புகுந்து ஒலியோடு எழ, அந்த ஒலி விடரகத்தேயும் எதிரொலித்தது என்க.

'இருப்பை வெண்பூவைத் தான் உண்ணுதல் இன்றித் தன்பெண்மானை விரும்பி அழைக்கும் ஆண்மாண்ன் செயலைக் கருதினாள், அங்ஙனமே அவள் காதலனும் அவளைப் பேணியவனாகத் தன் துயரையும் மறந்து செல்லும் அன்புடையவன் ஆக இருத்தலை நினைந்து; அன்றி, அத்தகைய அன்புடையானா தலை விரும்பியுமாம்.

‘விடுநிலம் உடைத்த கலுழ்கட் கூவல் கன்றுடை மடப்பிடி களிறோடு தடவும் என்றனள், வறுமைக்கண்ணும் பிரிதலின்றி, அவன் தன் காதலனுடனும், காதற்பேறான மகனுடனும் பிரியாது வாழ்தலை விரும்பினாளாக என்க.

இப்படிப் பகற்போதை நினைந்தவட்கு, இரவுவேளையின்

நினைவு கவலையைத் தருகிறது. அதனால் 'துச்சில் இருக்குங் கொல்லோ? காளையொடு முன்னுறச் செல்லுங் கொல்லோ?”