பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 51


என நோகின்றாள். இதனால் தன் மகளின் நலனிலே செவிலிக்கு உண்டாயிருந்த பொறுப்பும், அவள் பாசச் சிறப்பும் நன்கு புலனாகும்.

322. தேம்புதியோ நெஞ்சே?

பாடியவர்: பரணர். திணை: குறிஞ்சி. துறை: அல்ல குறிப்பட்டுப் போகின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு: பொதியிலுக்கு உரியவனாக விளங்கிய போர்வல்ல திதியனின் மலைவளம்.

(இரவுக்குறியிலே அன்பிற்கு உரியவளைச் சந்தித்து இன்புறப் பெரிதும் முயன்று வந்த தலைவன், அவளைக் காணப் பெறாதவனாகக் காத்திருந்து சோர்ந்து போய்த் தன்னூர் திரும்புகிறான். அப்போது. அவன் நெஞ்சிலே எழுந்த துயரம், இங்ஙனம் தானே பேசும் பேச்சாக எழுகிறது.)

வயங்குவெயில் ஞெமியப் பாஅய் மின்னுவசிபு மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல்
ஆராக் காமம் அடூஉநின்று அலைப்ப
இறுவரை வீழ்நரின் நடுங்கித் தெறுவரப்

பாம்புஎறி கோலிற் றமியை வைகி -
5

தேம்புதி கொல்லோ?-நெஞ்சே உருமிசைக்
களிறுகண் கூடிய வாள்மயங்கு ஞாட்பின்
ஒளிறுவேல் தானைக் கடுந்தேர்த் திதியன்
வருபுனல் இழிதரு மரம்பயில் இறும்பிற்

பிறையுறழ் மருப்பின் கடுங்கண் பன்றிக்
10

குறைஆர் கொடுவரி குழுமுஞ் சாரல்
அறையுறு தீந்தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்றுஅரு நெடுஞ்சிமைப்
புகலரும் பொதியில் போலப்

பெறலருங் குரையள்எம் அணங்கி யோளே!
15

நெஞ்சமே! நம்மைத் தம் அழகினாலே தாக்கி இங்ஙனம் வருத்தியோள் அவள்.

இடிமுழக்கம்போன்று முழங்கியவையாகப் போர்க் களிறுகள் தம்முள் திரண்ட வாட்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருக்கிற போர்க்களத்தின் கண்ணே, ஒளியெறிக்கும் வேலினனாகத் தன் தேரிலே விரைந்து சென்று கலந்து வெற்றி கொள்பவன், படைவீரர் பெருக்கினைக் கொண்ட திதியன் என்பவன், மலையுச்சியினின்று வருகின்ற அருவிப் புனல் வீழ்ந்து