பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 53


கோலினை அதன்பால் நஞ்சுபடிதலும் கூடுமென நினைந்து இன்றும் எறிந்துவிடுவது மரபு.

காமமிகுதியால் பெற்ற துயரத்தின் மிகுதியினை, 'இறு வரை வீழ்நரின் நடுங்கி’ எனக் கூறுவதன்மூலம் உயிரையே மாய்த்துக்கொள்ள நினைக்கும் பேரளவினது அத்துயரம் என்றனர்.

பகைவராற் புகுதற்கரிய திதியனின் பொதியில் மலைச் சிறப்பினைக் கூறுபவர், அவனுடைய போராண்மையினையும், அந்த மலைச்சாரலின் அஞ்சத்தக்க தன்மையினையும், அந்த மலைமுடிகளின் உயர்ச்சியினையும் கூறினார். அது எளிதிற் சென்றடைய இயலாதாக விளங்கும் தன்மையினைப் போலவே, அவளும் எளிதில் அடைதற்கு உரியள் அல்லள் என, அவளுடைய குடிப்பெருமையினையும் இதனால் அறிவித்தனராம்.

'குறவர் முற்றா ஏற்றரும் நெடுஞ்சிமை' என்பதனால்' மலைவாழ்நரான அவர்க்கும் அடைதற்கு அரிதாய அவை, பிறரால் எளிதிற் சென்றடைதற்கு இயலாவாகும் என, அவற்றின் அடையவியலாத் தகைமையினை நன்றாகக் காட்டியதும் அறிந்துஇன்புறுக.

'பாம்பெறி கோலில்' என்பதனைக், கோலெறி பாம்பின்' என மாற்றிக்கொண்டு, ‘கோலினாலே அடியுண்ட பாம்பினைப் போலச் செயலற்று' என்றும் பொருள் கொள்வர்.

323. கூந்தல் போன்ற மேகம்!

பாடியவர்: புறநாட்டுப் பெருங்கொற்றனார். திணை: பாலை, துறை: பரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

(தன்னுடைய தலைவனைப் பிரிந்தவளாக வாடியிருக்கின்ற தலைவியொருத்தியின் அளவற்ற பெருந்துயரினைக் கண்டு மனம் கலங்குகின்றாள் தோழி. அப்போது, கார்காலத் தோற்றமும் தோன்றவே. அதனைத் தலைவிக்குக் காட்டி, அவன் குறித்துச் சென்ற காலமும் அதுவாதலை உணர்த்தி, அவன் விரைவில் வருவானெனத் தேற்றித் தெளிவிக்கின்றாள் அவள். இந்த இனிமையுடன் அமைந்தது இச் செய்யுள்)

இம்மென் பேர் அலர் இவ்வூர் நம்வயின் செய்வோர் ஏச்சொல் வாடக் காதலர்
வருவர் என்பது வாய்வ தாக
ஐய செய்ய மதனில சிறியநின்

அடிநிலன் உறுதல் அஞ்சிப் பையத்
5