பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

அகநானூறு -நித்திலக் கோவை


தடவரல் ஒதுக்கம் தகைகொள இயலிக்
காணிய வம்மோ? - கற்புமேம் படுவி!
பலவுப்பல தடைஇய வேய்பயில் அடுக்கத்து
யானைச் செல்லினம் கடுப்ப வானத்து

வயங்குகதிர் மழுங்கப் பாஅய்ப் பாம்பின்
10

பைபட இடிக்கும் கடுங்குரல் ஏற்றோடு
ஆலி அழிதுளி தலைஇக்
கால்வீழ்த் தன்றுநின் கதுப்புறழ் புயலே!
கற்பின் மேம்பாட்டினை உடையவளே!

பலாமரங்கள் பலவாகத் திரண்டுள்ளதும், மூங்கில்கள் நெருக்கமுற வளர்ந்திருப்பதுமான பக்கமலைகைளிலே சென்று கொண்டிருக்கின்ற யானைக் கூட்டங்களைப்போல, வானத்தின் கண்ணே ஒளிவிளங்கும் கதிரும் மழுங்கிப்போமாறு எங்கணும் பரவிப் பாம்பின் படமும் அற்றுவீழுமாறு இடிக்கின்ற கடுமையான குரலினையுடைய இடியேற்றுடனே பனிக் கட்டியுடன் கூடிய மிக்க துளிகளைப் பெய்துகொண்டு, நின்னுடைய கூந்தலைப்போன்று இருண்டதான மேகங்கள் காலிரங்கியுள்ளன.

இம்மென்னும் ஒலியுடனே எழுகின்ற பெரிதான ஊரலரினை இவ்வூரிடத்தே நம்பாற் செய்கின்றவர்களுடைய செருக்குடைய சொற்கள் அற்றுப்போகுமாறு, நம் காதலற்கு உரியவர் வருவார் என்பதும் இனி வாய்ப்பதாகும். அதனை,

நின் அழகிய சிவந்த வலியிழந்த சிறிய அடிகள் நிலத்திற் பதிதலை அஞ்சி, உடல் வளைந்து வருதலான நின் தளர்நடையின் தகைமையனைத்தும் பொருந்துமாறு, மெல்லென நடந்து காணுதற்கு நீயும் வருவாயாக!

சொற்பொருள்: 1. இம் என் பேரலர் - இம்மென எழுகின்ற பெரிதான அலர் அன்றி, இடைவிடாது எழுகின்ற பேரலரும் ஆம்.2.ஏச்சொல்-செருக்குடைய சொல்.4.மதனில-செருக்கற்ற வலியற்ற மென்மையான, 6. தடவரல் ஒதுக்கம்-உடல் வளைந்து நடக்கும் நடை 11. ஏறு - இடியேறு.

விளக்கம்: 'நச்சுத் தன்மையுடைய பாம்பின் படம் அற்று வீழுமாறு இடிக்குரல் எழுதல்’ என்றது, அவ்வாறே நச்சுத் தன்மையுடைய ஊரலரும் கார்காலத்து வரவினாலே அழிந்து போம் என்றதாம். வேனில் இறுதிக்கண்ணே காதலர் வருவார் என்று தலைவியை வற்புறுத்தி, அவளையே வந்து காணுமாறு அழைக்கும் தோழியின் உறுதி, காதலனின் காதலன்பின் திறத்தையும் கூறியதாகும்.