பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 55


324. விருந்தும் பெறுகுநள் போலும்!

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார். திணை: முல்லை. துறை: வினைமுற்றிய தலைமகன் கருத்துணர்ந்து உழையர் சொல்லியது.

(தலைவன் தன் தலைவியைப் பிரிந்து வினைமேற் சென்றிருந்தான். சென்ற வினையும் நன்கு நிறைவுற்றது. அவனும் தேரேறி விரைய ஊர்செல்லும் கருத்துடையவனாக இருந்தான். தேரும் செல்லுதலைத் தொடங்கிற்று. ஒரே பகற் பொழுதுப் பயணந்தான் எஞ்சியிருந்தது, அப்போது, அவனுடனிருந்தோர் தமக்குள் சொல்லிக்கொள்வதாக அமைந்தது இச்செய்யுள்)

விருந்தும் பெருகுநள் போலும் திருந்திழைத் தடமென் பணைத்தோள் மடமொழி அரிவை
தளிரியல் கிள்ளை இனிதின் எடுத்த
வளராப் பிள்ளைத் தூவி அன்ன

வார்பெயல் வளர்த்த பைம்பயிர்ப் புறவில்
5

பறைக்கண் அன்ன நிறைச்சுனை தோறும்
துளிபடு மொக்குள் துள்ளுவன சாலத் -
தொளிபொரு பொகுட்டுத் தோன்றுவன மாய
வளிசினை உதிர்த்தலின் வெறிகொள்பு தாஅய்ச்

சிரற்சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த
1O

வண்டுண் நறுவி துமித்த நேமி
தண்ணில மருங்கிற் போழ்ந்த வழியுள்
நிறைசெல் பாம்பின் விரைபுநீர் முடுகச்
செல்லும் நெடுந்தகை தேரே

முல்லை மாலை நகர்புகல் ஆய்ந்தே!
15

தளிரினது பசுமை அழகினைப் பெற்றுள்ள கிளியினது, இனிதாக வளர்ந்துவருகிற அதன் வளர்ச்சிபெறாத பார்ப்பினது சிறகினையொத்துப் பெய்யும் மழையானது காட்டிலே பசுமையான பயிரினை வளர்த்திருக்கும். பாறையின் கண்ணைப் போல விளங்கும் நீர் நிறைந்து விளங்குகின்ற சுனைகள் தோறும் மழைத்துளி படுதலாற் பூமொட்டுக்கள் துள்ளுவன போல, சேற்றுடன் பொருதும் நீர்க்குமிழ்கள் தோன்றுவனவும் அழிவனவுமாய் விளங்கும். காற்றுக் கிளைகளினின்றும் உதிர்த்தலால் மணம் பரப்பியபடி கீழே வீழ்ந்து, சிச்சிலிப் பறவையின் சிறகுகளைப்போல அறல்பட்ட நிலத்திடத்தே கோலஞ்செய்த, வண்டினம் தேனுண்ணும் நறுமலர்களை ஊடறுத்துச் சென்ற தேரின் உருளைகள், குளிர்ந்த நிலத்திடத்தே பிளந்துசென்ற தடத்தில், மழைநீரானது, வரிசைப்படச் சென்று

5