பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 59


பழி அவர்பால் எங்ஙனம் ஆகும்?” இங்ஙனம் கூறியதாக உரைத்துக்கொள்க. இதனால், தலைவன்பாற் பழியில்லை என்றுரைத்த அவள் கற்புச்செவ்வி புலனாகும். வழியின் ஏதத்தைக் கூறியது. அவர் சொற்பேணாத பழியால் அங்குத் துன்புற நேர்தல் கூடாது என்றதனாலாம்.

மலை கவின் அழிந்த நிலைக்கு, அதியனுக்குப்பின், கிணை யொலி அடங்க, அதனால் உணவற்றுப் பொலிவற்று வாடி நலிந்த இரவலரின் நிலையினைக் கூறியுள்ளது அதியனின் கொடை மேம்பாட்டை விளக்குவதாகும்.

இதனால், தோழியும் தலைவனைப் பழிப்பதனை நிறுத்திக் கொள்வாள் எனலாம்.

326. கண் பிழைப்பதில்லை!

பாடியவர்: பரணர். திணை: மருதம். துறை: தோழி தலைமகனை வாயில்மறுத்தது. சிறப்பு: போஒர் கிழவன் பழையனின் படையாண்மை.

(பரத்தையுறவு கொண்டிருந்தானாகிப் பின் தன் இல்லத் துைைணவியை நாடிவந்த தலைவனுக்கு, 'அவன் ஆணைப்படி சென்று தலைவியிடம் கூறி அவளை இசைவிக்கச் செய்வதற்குத் தன்னால் இயலாது எனத் தோழி சொல்வதாக அமைந்தது இச் செய்யுள்)

          ஊரல் அவ்வாய் உருத்த தித்திப்
          பேரமர் மழைக்கண் பெருந்தோட் சிறுநுதல்
          நல்லள் அம்ம குறுமகள் செல்வர்
          கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
          நெடுங்கொடி நுடங்கும் அட்ட வாயில் 5

          இருங்கதிர்க் கழனிப் பெருங்கவின் அன்ன
          நலம்பா ராட்டி நடையெழில் பொலிந்து
          விழவிற் செலீஇயர் வேண்டும் வென்வேல்
          இழையணி யானைச் சோழர் மறவன்
          கழை யளந்து அறியாக் காவிரிப் படப்பைப் 1O

          புனன்மலி புதவிற் போஒர் கிழவோன்
          பழையன் ஓக்கிய வேல்போற்
          பிழையல கண்னவள் நோக்கியோர் திறத்தே!

மேனியிலே ஊர்ந்து படர்தலாகிய அழகு வாய்க்கப் பெற்ற, உருப்பெற்ற தேமலை உடையவள்; பெரிதான அமரினைச் செய்யும் குளிர்ச்சிகொண்ட கண்களை உடையவள், பெருத்த