பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 61


எம்முடன் உறவுகூடுதல் நினக்குப் பொருந்தாது என, இடித்துக் கூறியதுமாம்.

'பிழையல கண்' என்றது, பழையனால் வேலினைச் செலுத்தப்பெற்ற மாற்றாரின் உயிர் மீள்தலில்லை என்றாற் போல, நின் உள்ளமும் அவளுக்கு இரையாகிப் போனதன்றி. என்பால் மீளுவதாகாது என்றதாம்.

327. அடைதலும் தகுமோ?

பாடியவர்: மருங்கூர்ப்பாகைச் சாத்தன் பூதனார். திணை: பாலை துறை: பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறியது: பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது எனவும் பாடம்.

(தான் காதலித்த நல்லாளை மணந்து, அவளுடனே கூடியிருந்து, இன்பத்திலே திளைத்து வருகின்றான் தலைவன் ஒருவன். நெடிது அந்த இன்பம் நிலைபெறுதற்குப் பொருள்தேடி வருதலும் வேண்டும் என்ற கடமையினை அவன் உணரு கின்றான். அவன் உள்ளம் பொருளார்வத்தைத்துண்டிச்செலுத்து கிறது. காதலியைப் பிரிவதான துயரச்சுமை ஒருபால் வருத்த, அவன் வெதும்புகின்றான். வழிநடையின் கொடுமையும் அவன் மனத்தே எழுகின்றது. இத் தன்மைகளை விளக்கும் செய்யுள் இதுவாகும்.)

          'இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
          நன்பகல் அமையமும் இரவும் போல
          வேறுவேறு இயல ஆகி மாறெதிர்ந்து
          உளவென உணர்ந்தனை ஆயின் ஒருஉம்
          இன்னா வெஞ்சுரம் நன்னசை துரப்பத் 5

          துன்னலும் தகுமோ? துணிவில் நெஞ்சே
          நீசெல வலித்தனை ஆயின், யாவதும்
          நினைதலும் செய்தியோ எம்மே கனைகதிர்
          ஆவி அவ்வரி நீரென நசைஇ,
          மாதவப் பரிக்கும் மரல்திரங்கு நனந்தலைக் 1O

          களர்கால் யாத்த கண்ணகன் பரப்பிற்
          செவ்வரைக் கொழிநீர் கடுப்ப அரவின்
          அவ்வரி உரிவை அணவரும் மருங்கிற்
          புற்றரை யாத்த புலர்சினை மரத்த
          மைந்நிற உருவின் மணிக்கட் காக்கை 15