பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 73


சொற்பொருள்: 1. முளை - மூங்கில் முளைகள். முருக்கி - ஒடித்து.2. கேழ்-நிறம் கிளர்-ஒளிரும்.3 நிறம் - உருவத்தோற்றம்: மார்பும் ஆம். ஒடுங்கிய - பதுங்கிய, 4 உழுவை - புலி, 5. அழிதுளி - மிக்க பெயல். 6. கன்முகை-முனை கொண்ட கற்கள்.7. வாட்டிய - தொலைத்த செம்மல் - செருக்கு அறுகால் பறவை - வண்டு. 30. புரை - உயர்வு; சாயல் - மென்மைத் தன்மை. 1. அடங்க - உள்ளம் நிறைவற்று அமைதிகொள்ள 15. தண்டாக் காதல் - நீங்காத காதல்.

விளக்கம்: களிறு, அறுகால் யாழிசைப் பறவை இமிரச் செம்மலுடன் சென்றது' என்றது, அது மதநீர் சொரியச் செருக்குடன் சென்றதனைக் குறித்தாம். 'அன்புரைத் தடங்கக் கூறிய இன்சொல்' என்றது, 'தலைநாள் தோழிபாற் குறையிரந்து, அவளால் இசைவிக்கப் பெற்றுத் தலைவியின் கூட்டத்தைப் பெற்றவன் தலைவன்’ என்பதாம். அத்தகையன கூறித் தனக்கு உதவிய தோழிக்குத் தலைவி நன்றி பாராட்டுவாளாகக் கூறுகின்றனள் என்க. 'அமிழ்தத்தன்ன கமழ்தார் மார்பின்’ என்றதற்கு ஏற்ப, அத்தாரின்கண் வண்டு மொய்த்தலும் உள என்று குறிப்பவர், தழுவுங்கால் 'வண்டிடைப் படாஅ முயக்கம்' வாய்ந்தது என்றனர். அத்தகைய இறுக்கமான முயக்கமும் ஆம். 'தண்டாக் காதல்’ என்றனர், துய்க்கத் துய்க்கப் பின்னரும் புதிதுபுதிது துய்த்தற்கே அவாவும் விருப்பத்தினைக் குறித்தனர். இதனால், அவளை விரைந்து மணந்து கொள்ளு தலில் அவனுடைய நாட்டம் செல்லுமென்பதனையும் உணரவைத்தனர்.

உள்ளுறை பொருள்: ‘களிறு உழுவை தொலைத்துக் குருதிச் செங்கோடு அழிதுளி கழா அச் சென்று, பகைவாட்டிய செம்மலொடு, யாழிசைப் பறவை இமிரச் சென்று, பிடி புணர்ந்து, வாழையஞ் சிலம்பில் துஞ்சும்’ என்றனர் இது, தலைவன் அலர் கூறுவாரின் வாயினை அடக்கிக் களவினாலே வந்துற்ற மாசினைப் போக்கித் தலைவியை மணந்து சுற்றமும் நட்பும் கொண்டாட வளமிக்க இல்வாழ்விலே தலைவியுடன் கூடியிருந்து இன்புறுவன் என்றதாம்.

யாழிசைப் பறவை இமிரப் பிடிபுணரும் களிற்றினையும், கமழ்தார் மார்பின் வண்டிடைப் படாஅ முயக்கம்பெறும் தலைவனையும் ஒப்பிட்டுக் கண்டு இன்புறுக.