பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

அகநானூறு -நித்திலக் கோவை


விளக்கம்: தலைவியின் ஆகத்துப் படர்ந்த பசலையும் அவள் மேனியின் வாட்டமும் கண்ட ஊரவர், அவளை அந்நிலைக்கு உள்ளாக்கிய கொடுமைக்குக் காரணமாயினது குறித்துப் பிரிந்துசென்ற அவளின் காதலனைப் பழிக்கத் தொடங்குவர். இதுபற்றியே, 'பழி தலைத்தருதல் வேண்டுதி' என்றனளாம். 'தாங்கல் ஒல்லுமோ? பயம் கெடத் தூக்கி நீடலர், நின் எவ்வம் பெருமை உரைப்பின்’ என்றது, அவன் தலைவி மாட்டுக் கொண்டுள்ள காதன்மிகுதியை உரைத்து, அது மேலும் செவ்விதமாக இயலவே, அவன் பொருள்தேடிச் சென்றுள்ளனன் எனக் கூறியதாம். மேகத்தை அழைப்பன போல வானத்தே கையுயர்த்து நிற்கும் யானைக் கூட்டங்களின் நிலைக்குக், கோடைக்காற்றால் குருத்தொடிந்து சருச்சரையுடன் துளைபட்டு நிற்கும் மொட்டையான வெளிற்றுப் பனை மரங்களை உவமை கூறிய நயத்தினை அறிந்து நுகர்க.

தோழியின் ஆறுதலுரைகள் தன்னைத் தேற்றும் வகையினஆகாவென்பவள், 'தூது வரப்பெறின் பசலை மாய்தல் எளிது’ என்றனள்.

334. இப்பொழுதே செலுத்துக!

பாடியவர்: மதுரைக் கூத்தனார்; மதுரைக் கந்தரத்தனார் எனவும், மதுரைக் கோடரத்தனார் எனவும் பாடங்கள்; திணை: முல்லை. துறை: வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

(வேந்தனுக்குப் படைத்துணையாகச் சென்று பாசறையிடத்தே தங்கியிருக்கிறான் தலைவன். அவன் மேற்கொண்ட வினையும் முடிந்தது. பகைவரும் பணிந்து திறைசெலுத்த முன் வந்தனர். அவன் திரும்புவதாகக் குறிப்பிட்டிருந்த கார்காலமும் தொடங்கிவிட்டது. எனவே, தன் காதலியைக் காண்பதற்கான ஆர்வம் மிகுதியாக எழ, அவன், தன் பாகனிடத்தே சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது.)

ஓடா நல்லேற்று உரிவை தைஇய
ஆடுகொள் முரசம் இழுமென முழங்க
நாடுதிறை கொண்டனம்ஆயின் பாக!
பாடுஇமிழ் கடலின் எழுந்த சும்மையொடு

பெருங்களிற்றுத் தடக்கை புரையக் கால்வீழ்த்து
5
இரும்பிடித் தொழுதியின் ஈண்டுவன குழிஇ

வணங்கிறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
கழங்குறழ் ஆலியொடு கதழுறை சிதறிப்