பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 83


ஆணான நீர்நாயானது, வாளைமீனைப் பற்றிக்கொண்டு போரிட்டது. அதனால், நீர்த்துறை கலங்கல் உற்றது. அதனால், துறைக்கு நீர் மொண்டுபோவதற்கு வந்த மகளிர்கள், நுண்ணிய தொழில்நலம் பொருந்திய அழகிய தம் குடங்களை நீர் மொள்ளாது கீழே வைத்தனர். தெளிந்த கள்ளினைக் குடித்தவராகத், தம் கணவன்மாரின் பண்பற்ற பரத்தைமை உறவுகளைக் குறித்துப் பழித்துப் பாடியவராக, விரிந்த பூங்கொத்துக்களையுடைய காஞ்சிமரத்து நிழலிலே, குரவைக் கூத்து ஆடிக்கொண்டும் இருந்தனர். அத்தகைய இனிதான பெரிய பொய்கைத் துறையினைப் பொருந்திய ஊரையுடையவன் நம் தலைவன், தேர் கொண்டுவர வந்து சேர்ந்த, நேரிய அணிகளையுடைய அவனுடைய மகளிர் என்னுடைய நலனைச் சுட்டி ஏசுகின்றனர் என்பார்கள்!

'மிக்க சினத்தினையுடையதும், கொல்லும் தன்மையினை உடையதுமான, களிற்றியானையானது, கொல்லாது அருள் செய்தலினாலேயே, அதனைச் செலுத்தும் பாகன் நெடுங்காலம் உயிர் வாழ்கின்றான்' என்பது போன்றதே அவருடைய செயலும் ஆகும்.

அப் பெண்களும், அவர்களுடன் சேர்ந்த பிறரும், தாம் அழகு உடையவர்போலச் சொல்லுதல், முழவுகள் ஒலிக்கும் துணங்கைக் கூத்து ஆடிக்களிக்கின்ற விழாவினிடத்தே, யானும் அவ்விடத்து வாராதிருந்தமையினால் ஆகியதேயாகும்.

அவ்விடத்து யானும்வந்தால் ஞாயிற்றின் போக்கோடு சுழன்று திரியும் நெருஞ்சிப் பூவினைப்போல, அவனை என்னைச் சுற்றியே திரியுமாறு செய்வேன். அங்ஙணம் செய்யேன் என்றால்-

வெற்றி பொருந்திய வேலினையும், மழைபோல மிகுந்த அம்பினையும், மேகத்தைப் போன்ற தோற்கிடுகினையும் உடைய சோழர்களது, வில்வீரர்கள் திரண்டுள்ள அரணினையுடைய வல்லத்தின் புறத்தேயுள்ள காவற்காட்டினிடத்தே வந்தடைந்த ஆரியர்களின் படையினைப்போல, என்னுடைய நேரிய சந்தினைக்கொண்ட முன்கையிலே செறிந்துள்ள இவ்வளைகள், சிதைந்து ஒழிந்துபோவன ஆகுக.

சொற்பொருள்: 1. குழற்கால் சேம்பு - உட்டுளை கொண்ட தண்டினையுடைய நீர்ச்சேம்பு. 2. பாசிப்பரப்பு - பாசி படர்ந்திருக்கும் நீர்ப்பரப்பு. 3. பிணவு - பெட்டை நாய். உயக்கம் சொலிய - வருத்தத்தைப் போக்க. 5. சுலுழ்தல் - கலங்குதல். 6. தெண்கள் - தேறல் தெளிந்த கள்ளாகிய தேறல். 7. நுண்செயல் - நுண்ணிய வேலைப்பாடு; குடங்களின் மேற்புறத்தே