பக்கம்:அகமும் புறமும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 115

சுனைபாய்ந்து ஆடிற்றும் இலன்' என நினைவிலை
பொய்யல் அந்தோ வாய்த்தனை! அதுகேட்டுத்
தலைஇறைஞ் சினளே அன்னை
செலவுஒழிந் தனையாள் அளியைநீ புனத்தே!'

(நற்றிணை, 147)

(யாங்காகுவமோ-நாம் இனி எவ்வாறு தப்பப் போகி றோமோ; தேம்படு சாரல்—இடம் அகன்ற மலைச்சாரல் ; பெருங்குரல்—பெரியகதிர்,வெதிர்புனைதட்டை—மூங்கிலாற் செய்த கிளியை விரட்டும் கருவி; பொய்யால் வாய்த்தனை —பொய் கூற முடியாமல் உண்மை கூறி விட்டாய்; இறைஞ்சினள்—தொங்கவிட்டாள்;அளியை — நீ இவ்வாறு குடும்பம் நடத்தப் போகிறாய் என்று பிறரால் இரங்கத் தக்கவள்).

‘மன்ற மடவை, வாழிய முருகே!’

தலைவிக்கு உற்ற துணைவியாய் உள்ள தோழியின் சிறப்பையும் அவள் தலைவிக்குச் செய்த உதவியையும் பற்றிக் கூறும் பாடல் இது;

வானை முட்டும் மலை ஒன்று. பல வளங்களும் நிறைந்துள்ளன. அங்கு. குறிஞ்சித்திணை என்றால் மலையும் மலையைச் சுற்றியுள்ள இடங்களுமே குறிக்கப்படும். இம் மலைநாட்டை ஆள்பவன் ‘நாடன்’ என்று பொதுவாகக் குறிக்கப்படுவான். அவனுடைய மலை பல வளங்களுக்கும் உறைவிடமாய் இருப்பதற்கு நீர்வளம் வேண்டுமல்லவா? அவ்வளத்தை அங்கு ஓயாமல் பெய்யும் மழை தருகிறது. ஆனால், மலையில் பெய்யும் மழை நில்லாமல் ஓடிவிடும் இயல்புடையது. எனவே, அம்மழை நீரைத் தேக்கி வைத்துக் கொள்ள, இயற்கை அன்னை குளங்கள் தோண்டி வைத்திருப்பாள். அவற்றிற்குச் ‘சுனைகள்’ என்று பெயர் கூறுவர்.

பாறைகள் மூடிய சுனைகள் பக்கம் மாந்தர் செல்லவும் அஞ்சுவர். சின்னாட்களில் அவைகளும் கடவுள்