பக்கம்:அகமும் புறமும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 • அகமும் புறமும்


“முருகப் பெருமானே, நீ நெடுங்காலம் இந்த மடமையோடு வாழ்வாயாக! தலைவியானவள், கடவுள் தன்மை பொருந்திய மலையிலுள்ள சுனைகளில் மலரும் குவளைப் பூவையும் உதிரம் போலச் சிவந்துள்ள காந்தட்பூவையும் அழகு பொருந்தக் கட்டிக் கொண்டு பெரிய மலையின் பக்கங்கள் எல்லாம் அழகுபொருந்தச் சூர் அர மகளிர் அருவியின் இனிய ஓசையைப் பின்னணியாகக் கொண்டு ஆடும் மலைக்குத் தலைவனுடைய மார்பு தந்த வருத்தத்தால் உண்டான நோய் நின்னால் ஏற்பட்ட துன்பம் அன்று என்பதை நீ நன்கு அறிந்திருந்தும், வேலன் வெறியாடும் களத்தில் இறுமாந்து அங்கே கொடுக்கப்படும் பலியை ஏற்றுக் கொள்வதற்காக வந்தவனே, நீ கடவுளாய் இருப்பினும் இருக்கட்டும்! திண்ணமாக நீ அறியாமை உடையவன்தான்!”

'கடவுள் கற்கனை அடையிறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண்பூ உருகெழக் கட்டிப்
பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன்இயத்து ஆடும் நாடன்
மார்புதர வந்த படர்மலி அருநோய்
நின்அணங்கு ஆன்மை அறிந்தும் அண்ணாந்து
கார்நறுங் கடம்பின் கண்ணின் சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்!
கடவுள் ஆயினும் ஆக!
மடவை மன்ற வாழிய் முருகே!

(நற்றிணை-34)

(அடை இறந்து — இலைகளை விலக்கிக்கொண்டு; அவிழ்ந்த—மேலே மலர்ந்துள்ள குருதி—இரத்தம்; உருகெழ —அழகு பொருந்த அடுக்கம் பொற்ப—பக்க மலைகள் அழகு பொருந்த இன் இயத்து—(பின்னணியான) இனிய வாத்தியமாக; படர்மலி அருநோய்—நினைப்பதால் மிகுதிப் பட்டு நீக்க முடியாத அரியநோய்; நின் அணங்கு அன்மை —நீ தொட்டதால் வந்த வருத்தமன்று; அண்ணாந்து —