பக்கம்:அகமும் புறமும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 135

அதனைக் கொண்டு வாரும் மடல் ஏறுவதற்கு,’ என்று கூறுகிறாள் தோழி.


யாழும் எழுதி எழில்முத்து
        எழுதி இருளின் மென்பூச்
சூழும் எழுதிஓர் தொண்டையும்
        தீட்டிஎன் தொல்பிறவி
ஏழும் எழுதா வகைசிதைத்
        தோன்புலி யூர்இளமாம்
போழும் எழுதிற்றுஓர் கொம்பர்உண்
        டேல்கொண்டு போதுகவே!
                                                 (திருக்கோவையார்–79)

திருமங்கை ஆழ்வார் 'சிறிய திருமடல்’ என்றும் 'பெரிய திருமடல்’ என்றும் இம்மடலேறுதலை இரண்டு பாடல்களாக அருளிச் செய்துள்ளார். அவ்வழகிய பாடலிலும் ஆழ்வார்,

"பேர்ஆ யிரமும் பிதற்றிப் பெருந்தெருவே
ஊரார் இகழினும் ஊராது ஒழியேன்நான்
வாரார்பூம் பெண்ணை மடல்.’’

(சிறிய திருமடல், 78-80)

என்று அருளுவது காண்க.

நாம் கூறி வந்த தலைவனும் தோழியைக் கண்டு, தான் மடல் ஏறித்தான் தலைவியை அடைய வேண்டுமா என்று கேட்கிறான். 'மடல் ஏறி அதனால் பெறுகின்ற பழியுடனா தலைவியை அடைய வேண்டும்? இதைவிடச் சாவு வருமேயாயின், அது எவ்வளவு சிறப்புடையதாக இருக்கும்!” என்று வருந்திக் கூறுகிறான் அத்தலைவன்.

"பனை மடலாலே செய்யப்பெற்றகுதிரையில் ஏறி, எருக்கம்பூ" பூளைப்பூ முதலியவற்றைச் சூடி, இடம் அகன்ற பல ஊர்களிலும் நாட்டிலும் திரிந்து, அழகிய தலைவியின் நலங்களை எல்லாம் எடுத்துக் கூறிச் செல்லும் மடலேறும்

116*அ