பக்கம்:அகமும் புறமும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 • அகமும் புறமும்

கொண்டிருக்கும் பொழுதே யாரோ ஒரு புலவர் இந்தப் பொருளின் நிலையாமை பற்றிக் கூறியது அவன் நின்ைவுக்கு வருகிறது. அவர் என்றோ ஒருநாள் பாடினார்;

‘விழுநர்க்கு இறைச்சியாய் விரல்கவர்பு இசைக்குங்கோல்
ஏழும்தம் இசைகெட இடைநின்ற நரம்புஅறுஉம்
யாழினும் நிலைஇல்லாப் பொருள். . . .’
(பாலைக்கலி-8)

(விரும்பிக் கேட்பார்க்கு இன்பந் தருவதாய், விரலாலே வாசிக்கப்படுகிற நரம்பு ஏழும், தாம் இருந்தும் பயன் படாதபடி வாசிக்கும் வில்லில் அகப்பட்டு இடை நின்ற நரம்பு அறும்படியான யாழைக் காட்டிலும் நிலையில்லாத பொருள்)

மேலும் அந்தப் புலவர் பொருளின் நிலையாமை பற்றித் தொடர்ந்து பாடியதைத் தலைவன் இப்பொழுது நினைவிற்குக் கொண்டு வந்தான்;

‘மரீஇத்தான் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது
பிரியுங்கால் பிறர்எள்ளப் பீடுஇன்றிப் புறம்மாறும்
திருவினும் நிலையில்லாப் பொருள் . . . .'
                                                           (பாலைக்கலி–7)

(திருமகள், தான் விரும்பி மனத்தால் ஏற்றுக் கொண்டவர் களை, தான் வந்து சேரும் பொழுது இருந்த நிலைபோல் இல்லாமல் பிரிந்து செல்லும் பொழுது பிறர் கண்டு கேவலமாய்ப் பேசும் அளவுக்குத் தாழ்த்திவிட்டுச் செல்லும் தன்மை போல நிலையில்லாத பொருள்)

அதாவது, புதுப் பணக்காரன் ஆனவன் மீட்டும் ஏழையானால், அவனது பழைய நிலைதானே என்று கருதாமல், உலக்த்தார் அவனை மிகுதியும் எள்ளி நகை யாடுகிறார்களாம். முன்னர் ஏழையாய் இருந்தபொழுது இருந்த நிலைகூட இப்பொழுது (இடையில் பணக்-