பக்கம்:அகமும் புறமும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் வாழ்வு • 163

பாடினாள். ஆனால் கவிதையைப்பாடியது போதனார் என்ற ஆண் மகனார். இதோ கவிதையைப் பாருங்கள்:

‘பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்
புடைப்பில் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்என்று ஒக்குபு புடைப்பத் தெண்ணிர்
முத்துஅரிப் பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர்
பரீஇமெலிந்து ஒழியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுஉணர்ந் தனள்கொல்!
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றுஎனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்குஅறல் போலப்
பொழுதுமறுத்து உண்ணும் சிறுமது கையளே.’

(நற்றிணை–110)

(பிரசம்–தேன்; புடைப்பில் சுற்றும்–குஞ்சம் கட்டிய; முத்து அரிப்பொன் சிலம்பு–முத்தை உள் ஈடாக உடைய பொன் சிலம்பு; அரிநரை–மெல்லிய நரைத்த; பரீஇ மெலிந்து ஒழியப்–பின் தொடர்ந்து ஓடிப் பற்ற முடியாமல் விட்டுவிட குடிவறன் உற்றென–கணவன் வீடு வறுமையுற்றதாக; கொடுத்த தந்தை–பெற்று வளர்த்த தந்தை; கொழுஞ்சோறு–செல்வ உணவு; ஒழுகு நீர்–ஓடும் தண்ணீர்; நுணங்கு அறல்–இடை இடையே கிடக்கும் மணல் திட்டுப்போல ஒரு முறை உணவு உண்டும் ஒரு முறை பட்டினி கிடந்தும் வாழும் வாழ்வு; பொழுது மறுத்து உண்ணும்–ஒரு பொழுது உணவு உண்டு மறு பொழுது உணவின்றி இருக்கும்; சிறு மதுகையளே–சிறிய வண்மையை உடையவள்)

பழந்தமிழ்ப் பெண்மணிகள் வாழ்வில் ஓர் ஒப்பற்ற ஏடாகும் இப்பாடல். கவிதையைப் பன்முறை படித்துச்