பக்கம்:அகமும் புறமும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166 • அகமும் புறமும்

செல்லுகிறான். அந்த இடையனுடன் உறவு கொண்டதா இந்தக் குயிலும்? ஏன் இதுவும் இப்பொழுது கூவத் தொடங்கிவிட்டது? செவ்வானத்தையும் தென்றலையும் கண்டவுடன் குயிலுக்குக் ‘குஷி’ பிறந்துவிட்டது. ஆனால், குயிலுக்குப் பிறந்த குவியில் அதுபாட ஆரம்பிக்கத் தலைவிக்கு இது தலைவேதனையாக அன்றோ ஆய்விட்டது! தலைவனை மறக்க முயன்ற தலைவிக்கு எத்தனை பகைகள் திரண்டெழுந்து விட்டன! மாலைக் காலம், சிவந்த அந்த வானம், குயில், துணையுடன் வரும் மாடுகளும் பறவைகளும், இடையன், தென்றல், மயில், பிறைச்சந்திரன்-இவை அனைத்தும் கார் காலத்தில் உள்ளவை. இவற்றை அடிப்படையிற் கொண்டு, இலக்கண ஆசிரியன் ‘காரும் மாலையும் முல்லை’ (தொல், அகத்திணை, 6) என்று கூறிப் போனான்.

இந்த நிலைக்களத்தை வைத்துக்கொண்டு ஒரு தலைவி படும் பாட்டை இதோ பிற்காலப் புலவன் ஒருவன் சித்திரிக்கிறான்.


தண்ணமுது உடன்பிறந்தாய் வெண்ணிலாவே!
      தண்ணளியை ஏன்மறந்தாய் வெண்ணிலாவே!
பெண்ணுடன் பிறந்ததுஉண்டே வெண்ணிலாவே! என்றன்
      பெண்மைகண்டும் காயலாமோ வெண்ணிலாவே!

திக்கெலாம் தென்றல் புலிவந்து பாயுதேமன்மதா-குயில்
சின்னம் பிடித்தபின் அன்னம் பிடியாதே!

(குற்றாலக் குறவஞ்சி, 24,25)

இத்துணைத் துயரத்துடன் இருப்பினும், தலைவி தன் கடமையிலிருந்து தவறினதில்லை. அவளைத் தலைவன் நன்கு அறிவான். எனவே, பிரிந்து சென்று மீளும்பொழுது ஓயாமல் தலைவியைப் பற்றியே நினைந்துகொண்டு வருகின்றான்; மீண்டு வரும் பொழுது குதிரைகள் பூட்டிய தேரில் வருகின்றான். தேரோட்டுபவனும் தலைவனுடைய மன நிலையை நன்கு அறிந்து, மிகவும் வேகமாகத்தான்