பக்கம்:அகமும் புறமும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180 • அகமும் புறமும்


தாம்வரத் தெளித்த பருவம் காண்வர
இதுவோ? என்றிசின் மடந்த மதியின்று
மறந்துகடல் முகந்த கமஞ்சூல் மாமழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
காரென்று அயர்த்த உள்ளமொடு தேர்வுஇல
பிடவுங் கொன்றையும் கோடலும்
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே.

(நற்றிணை–9)

(நிரம்பா–செல்லத் தொலையாத; உருப்பின்–வெப்பத்தையுடைய, பனிக்கும்–நடுக்கத்தைச் செய்யும்; வரத் தெளித்த–வருவதாக உறுதி கூறிய மதியின்று–அறிவின்றி; இறுத்த–பெய்த; வண்பெயல்–வளப்பம் பொருந்திய மேகம்; அயர்த்த–சந்தேகித்த; கோடல்–காந்தள் பூ; மடவ–அறிவற்றவை.)

பெய்கின்ற மழையையும், பூக்கின்ற கொன்றை, காந்தள், முல்லை முதலியவற்றையும் மறுத்து, தலைவன் சொல் தவறமாட்டான் என்று தலைவி கொண்டிருக்கும் இமயமலையை ஒத்த நம்பிக்கை வாழ்வதாக! பெண்டிர் இத்துணை நம்பிக்கை கொண்டிருந்தமையின், அற்றை நாள் சமுதாயம் வாழ்ந்தது. இன்றும் நாம் தமிழரெனத் தலை தூக்கித் திரிய இது வாய்ப்பும் வழியும் வகுத்தது.

நெய்தல் திணை

நெய்தல் திணை கடலிலும் கடல் சார்ந்த இடத்திலும் நடைபெறுவது. மாலைக் காலம் இதற்குரிய காலம் என்பர்.

தலைவன் பிரிவை ஆற்றாளாகிய தலைவி வாய் விட்டுப் புலம்புவதை அறிவிக்கும் நெய்தல் பாடல்கள். இக்கருத்து இல்லாமல் கடலும், கடலைச்சார்ந்த பொருள்-